மஹிந்த ராஜபக்சவிற்காக அன்று பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்துகொண்டு நாட்டை குழப்புகின்றனர். அவற்றுக்கு அஞ்சி நாட்டை சீரழிக்க நாம் இடமளிக்க மாட்டோம். மஹிந்தவுக்காக மேளமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக்...
வட பிரதேசத்தில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தி விடும் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதியில் அண்மையில் தற்கொலைத் தாக்குதல் அங்கிகள், மோட்டார் எறிகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான வேண்டுகோள் வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக்...
முன்னைய அரச தலைவர்கள் சிலர் ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு கடும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிதியமைச்சின் புதிய அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய அரச தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தனி விமானங்களில் பயணங்களை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் நாடுகளில் குறித்த விமானங்கள் பல நாட்கள் வரை நிறுத்தப்பட்டிருக்கும்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குண்டு துளைக்காத வாகனத்தை பழுதுபார்த்து விரைவில் வழங்குமாறு, மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஜகத் குமார பஸ்நாயக்க கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகங்களில் ஊடாக அவர் இதனைக் கோரியுள்ளார். அவர் மேலும் கோரிகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குண்டு துளைக்காத ஜீப் வண்டி நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனைத் திருத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த ஜீப் வண்டி பழுதுபார்க்கப்படவில்லை. அரசியல்...
நட்சத்திர விஞ்ஞானத்துக்கு ஏற்ப காரணிகளை ஆய்வு செய்து பார்க்கும் போது 2014ம் ஆண்டிலிருந்து காலநிலையில் பலவித வேறுபாடுகள் (மாற்றங்கள்) ஏற்பட ஆரம்பமாகி உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையான (ஆரம்பம்) காலத்தில் இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படும். இந்த காலநிலைத் தன்மையின் போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் இருப்பது சாதாரணமானதாகும். காற்று வீசுவது குறைதல், கீழ்வளிமண்டலத்தில் இருக்கும் நீரின் ஆவியாகும் தன்மை ஆகியவற்றால் அதிகமான வெப்பம்...
சாவகச்சேரி, மறவன்புலவு தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்பு விடயம் அரசாங்கத்தினதும், அரசின் கீழ் உள்ளவர்களினதும் சதித் திட்டம் என்பதுடன், தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான நேற்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால்...
  மருத்­து­வ­ம­னைக்கு உயி­ரி­ழந்த நிலையில் கொண்டு வரப்­பட்ட கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வரை ஏற்று அவ­ரது வயிற்­றி­லி­ருந்த இரட்டைக் குழந்­தை­களை பிர­ச­விக்கச் செய்­வ­தற்கு மருத்­து­வ­மனை மறுத்­த­தை­ய­டுத்து, அந்தப் பெண்ணின் உற­வினர் ஒருவர் குறிப்­பிட்ட மருத்­து­வ­ம­னைக்கு வெளியில் பலரும் பார்த்துக் கொண்­டி­ருக்க இறந்த பெண்ணின் வயிற்றை கத்­தியால் வெட்டிக் கிழித்து இரு குழந்­தை­க­ளையும் வெளியில் எடுத்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் கமெ­ரோனில் இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி காட்­சியை அங்­கி­ருந்­த­வர்கள் கைய­டக்கத் தொலை­பேசி புகைப்­படக் கருவிகள் மூலம் பட­மெ­டுத்து வெளி­யிட்­டுள்­ளனர்....
  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் அட்டன் நுவரெலியா  பிரதான வீதியில் இடம்பெற்ற பாறிய வாகன விபத்தில் காயமுற்ற 5 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளனர் 01.04.2016 அன்று காலை 7.30 மணியளவிலே இவ்வீபத்து நிகழ்ந்துள்ளது திம்புள் பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் பகுதியிலே மூன்று வாகனங்கள் ஒன்றாக மோதுண்டுள்ளது கொட்டகலையிலிருந்து அட்டன் ஆடைதொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிவந்த பஸ்ஸை கொட்டகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற. லொறி முந்திசெல்ல முற்பட்ட போது...
  திருநங்கை ஐஸ்வர்யா, ஒரு திருநங்கையின் வாழ்கை மற்றும் சமுதாய அங்கிகாரம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
  பௌத்தர்களே இல்லாத கொக்கிளாயில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு உறுப்பினர் ரவிகரனிடம் இருந்து தகவல்களைப் பெற்ற ஆளுநர் றெஜினோல்ட் கூரே கொக்கிளாய்க்கு நேரில் சென்று விடயங்களை ஆராயவுள்ளார். இதன்போது ரவிகரனை சந்தித்துப் பேசவும் விருப்பம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – கொக்கிளாய் கிராமத்தில் பௌத்தர்களே இல்லாத நிலையில் தனியார் காணியை அபகரித்து பிக்கு ஒருவர் அங்கு அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்து வருகிறார். இது தொடர்பில் கடந்த...