முல்லைத்தீவு மாவட்டதில் தொடரும் வெப்பமான காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொடரும் காலநிலை மாற்றத்தால் பெருமளவு வெளிநோயாளர்கள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாக அறியமுடிகின்றது.
வெப்பம் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிகிடக்கின்றது.
எனினும் இன்று காலை சிறிதாக மழைபெய்து ஓய்ந்துள்ளது தொடர்ந்தும் மழை பெய்யாதா என்று முல்லைமக்கள் ஏங்குவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் அரசு விளையாடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்தார்.
கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சாவகச்சேரியில் நேற்று மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து யுத்த ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அனைத்துமே தற்போது, புதுப்பிக்கப்பட்டவையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், கைப்பற்றப்பட்ட பொருட்களை...
டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 565 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 29ஆம் திகதி ஆரம்பமான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது எதிர்வரும் 4ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும்...
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர், நேற்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 46 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களில் 7 பேர், நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏனைய 39 பேரும் தொடர்ந்து புனர்வாழ்வு பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கேணல் ஏ.ஆர்.ஹெமிடோன் தலைமையில், இவர்கள் எழுவரையும்...
கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதான பெண்! தீர்ப்பைக் கேட்டதும் மயங்கி வீழ்ந்தார் .
Thinappuyal -
கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதான கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்தப் பெண், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டபெண்ணை நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில்...
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் அண்மைக்காலமாக இனந்தெரியாதவர்களினால் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன்கீழ் இன்று அதிகாலை கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம்,கொமினிகேசன்,பாமசி உட்பட ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.
45 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் நேரடியாகவே அரசியல்வாதிகளின் பெயர்களில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை பிரதிநிதி;த்துவம் செய்யும் மற்றும் முக்கியமான அரசியல்வாதிகளின் பெயர்களில் இவ்வாறு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களில் 13 அனுமதிப்பத்திரங்கள் குருணாகல் மாவட்ட அரசியல்வாதிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு முதல் இதுவரையில் அரசாங்கங்கள் 1098 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது அநேகமாக அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி உண்மையிலேயே 45 மதுபானசாலைகளுக்கு மேலதிகமாக பெரும் எண்ணிக்கையிலான மதுபான சாலைகளுக்கும்...
புலிகளிடமிருந்து பெற்ற பெருந்தொகை தங்கம், ஷிரந்தியின் அந்தப்புரத்தில்..கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Thinappuyal -
இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் தீவிர விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு கொள்ளையடித்த தங்க நகைககள் இலங்கையின் முன்னாள் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல்வேறு மேசடி தொடர்பில் ராஜபக்ஷர்களிடம் நிதி குற்றப் புலனாய்வு...
வவுனியா மாவட்டத்தின் உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வாரஇறுதிச்சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், நகரசபை செயலாளர், பிரதேச...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல மாதங்களாக தெரிவித்து வந்ததாகவும் , கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த...