அனுமதி பத்திரமின்றி யானைகளை வைத்திருந்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். வன விலங்கு திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் தொடர்பான புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்த வழக்கு கொழும்பு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் யானைகளை வைத்திருந்த நபர்களுக்கு எதிராக அந்தந்த நீதிமன்ற வயலங்களில்...
சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு- மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார். அவரைப் பிடிப்பதற்காக, வன்னேரிக்குளம் பகுதியில் வீதித்தடைகளை பொலிஸார் அமைத்திருந்தனர். நேற்று...
  ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக கூறுகிறது. இதற்காக ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் நடவடிக்கை அண்மையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக கூறினார். தமிழீழக் கோரிக்கையை கைவிடுமளவில் ஸ்ரீலங்கா அரசு எப்படியான நல்லெண்ணத்தை தமிழருக்குச் செய்துவிட்டது என்பதையே இக் கட்டுரை ஆராய்கிறது.   தமிழீழக் கோரிக்கை என்பது...
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கூட்டு எதிர்க்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையில்...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக் பாகங்களைப் பொருத்தி உருவாக்கப்படுவனவாகும். இவ்வீடுகள் அம்மக்களது பயன்பாட்டுக்கு அந்நியமானவை என்றும் வாழ்க்கைமுறை காலநிலை, சூழல்...
அமைச்சரவைக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பாலான அமைச்சரவைப் பத்திரங்கள் குளறுபடி தன்மையைக் கொண்டவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிப்பது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றின் போது...
இலங்கை மின்சாரசபையின் முகாமைத்துவத்தினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எச்சரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மின்சார தடைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை ஜெர்மனின் மஸ்சினென்பாப்ரிக் ரெய்ன்ஹூசென் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய மின்சார உப நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களை அடுத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதேவேளை மின்சார சபையின் உயரதிகாரிகள், இலகுவான வழியில் தப்பிக்க முயற்சிக்காமல் தமது கடமைகளை...
உரிய அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கான மன்னிப்புக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மன்னிப்புக்காலத்தின் இறுதித்தினம் இந்தவாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தக்காலப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்கமுடியும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன அறிவித்துள்ளார். இதன்நிமித்தம் பணத்தொகைளும் ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நிலைமை அனைத்து நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது உரிமைகள் முடக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பில் இரண்டு வாரங்களில் பதிலளிப்பதாக அனைத்து நாடாளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் மாடீன் சுன்கொங் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் தமது உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாக...
கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்களின் பங்களிப்பானது போராடத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்னர் முஸ்லீம் இனம் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததன் நிமித்தம் யாழ் மண்ணிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். ஆதன் பின்னர் முழுமூச்சாக போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலையிலேயே முஸ்லீம் அமைச்சர்களும, முஸ்லீம் இனத்தவர்களும் செயற்பட்டு வந்தனர். யுத்தம் முடி வடைந்த பின்னர் வடபகுதி முஸ்லீம்கள் மீளவும் குடியேற்றப்பட்டனர். இதன் பின்னரான அவர்களுடைய அரசியலானது...