ஏ எம் முஹம்மத் அனீஸ்,  முகாமைத்துவமற்றும் வர்த்தகபீடம், இலங்கைதென்கிழக்குபல்கலைக்கழகம். இன்றைய கால கட்டத்தில் புதிய அரசியலமைப்பு பற்றிய கருத்தாடல்களே அனைத்து சமூகங்களினதும் மற்றும் அரசியல் ஆய்வாளர்களினதும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. ஜனநாயக நாடொன்றில் வாழக் கூடிய ஒரு சிறுபான்மை சமூகம் சுதந்திரமானதும் சமத்துவமானதும் மற்றும் தத்தம் உரிமைகளை சரிவரப் பெற்றும் வாழ்வதற்கு அந்தநாட்டிற்கே உரித்தான அரசியல் யாப்பே உறுதுணை செய்கின்றது. அந்த மக்களினது அரசியல் காவலனாகவும் கூட அந்த அரசியல் யாப்பே செயற்படுகின்றது. இலங்கை போன்ற...
  இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில்  ‘தனிஈழம்’ எனவும், மறுபுறத்தில் ‘சமஷ்டி’ எனவும் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ எனவும் பல்வேறு முரண்பட்ட குழப்ப அரசியலை  மக்கள் மீது விதைத்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற பிரிவினர் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழித்ததுடன் இறுதியில் அவர்களே ...
சாவகச்சேரியில்  இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் இராணுவத்தினரிடம் சரணடையாத பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இவ்வாறானவர்கள், நாட்டிற்கு பாரதூரமான அச்சுறுத்தலாக மாறக்கூடும்”  என கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. வெடிபொருட்களை கண்டு பிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரையில் அடையாளம் காண வேண்டுமென கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தற்கொலை அங்கி உள்ளிட்டவற்றை கண்டு...
ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், குண்டு வைத்தோ, துப்பாக்கி முனையிலோ குறிப்பிட்ட சில மக்களின் கொள்கை, நம்பிக்கை அல்லது அவர்கள் சுயமாக...
அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. நேற்றுபுதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்திற்கு முன்பதாக அல்லது அதற்கு பின்னர் இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கும் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. அத்துடன்,  பதுளை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி எம்.பி.யும் முன்னாள்...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த அறை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதில் கடத்தப்பட்டவர்களுக்கு சொந்தமான...
  ) ஈராக்கை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பினர் தங்களிடம் பிணைய கைதியாக உள்ள 3 குர்தீஷ் வீரர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஐ.எஸ் அமைப்பு இருந்து வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு பல்வேறு நாடுகளிலும் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் வசமுள்ள பகுதிகளை அரசாங்கத்திடமும் ஏனைய கிளர்ச்சி படையினரிடமும்...
  முல்லைத்தீவு அலம்பில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட பத்தாயிரம் கிலோ பாரை மீன்கள் மிக அன்மைக் காலமாக மீன்கள் மிக குறைவான அளவில் பிடிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது. ஆனால் வழமைக்கு மாறாக விடீர் என காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அதிகளவான பெறுமத்தியான மீன்கள் பிடிக்கப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. கடல் அமைப்பிலும் மற்றைய கடல்களை விட மிகவும் மாறுபட்டதாக அமைந்திருக்கும் முல்லைக் கடல் மீனவர்களுக்கு அதிக வருவாயைக் கொடுக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
  லெபனான் நாட்டில் 12 வயது சிறுமியை 60 முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் கடற்கரை பகுதியில் அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோ பதிவில், முதியவரான அந்த நபருடன் 12 வயது சிறுமி திருமண கோலத்தில் இருந்துள்ளார். கடற்கரை பகுதியில் வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ வெளியானதும் இதுவரை 1.7 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவுடன் லெபனான்,...