பௌத்தர்களே இல்லாத முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை வட மாகாண ஆளுநருக்கு வழங்க நாங்கள் தயார். ஆனால் அதை தடுத்து நிறுத்த அவர் தயாரா? என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குறே பேசினார்.
இந்த சந்திப்பின்...
களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்வதோடு, சுமார் 1000 மாணவர்கள் வரை இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த அரசாங்கம் மாணவர்களின் கல்வியை மலிவு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு...
எதிர்வரும் வருடங்களில் 200 நெற் களஞ்சியசாலைகளும்,4 பெரிய நெல்ஆலைகளும் அமைக்கப்படும் என கிராமிய பொருளாதார அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த களஞ்சியசாலைகளும்,நெல்ஆலைகளும் கிளிநொச்சி, குருநாகல், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு களஞ்சியசாலைகள் அமைப்பதால் இந்த நாட்டு மக்களுக்கு தேவையான நெல்லினை களஞ்சியப்படுத்துவதோடு மட்டுமின்றி சதோச,கூட்டுறவு நிலையங்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான அரிசியினை வழங்க முடியும் எனவும்...
முல்லைத்தீவு மாவட்டம், காசிநகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து அங்கு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காசிநகர் பகுதியை அண்மித்த குமுழமுனை பகுதியில் கடந்;த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய காடழிப்பு பெரும் போராட்டங்களின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தும் காடழிப்பு நடைபெற்று...
வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவில் குளறுபடியின் பின்னணி என்ன?- சிவசக்தி ஆனந்தன் எம்.பி
Thinappuyal -
உரிமைக்காகப் போராடிய ஒரு இனத்தை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தி அவர்களின் உயிர், உடைமை ஆகியவற்றிற்கும் அழிவுகளை ஏற்படுத்திவிட்டு சர்வதேச சமூகம் வழங்கும் நிவாரணங்களையும் தட்டிப்பறிக்கும் முயற்சியில் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது.
புதிதாக அமைக்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவித்த போதே, மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக...
வட, கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விசேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான உதவித் திட்டங்களின் மூலமாக தங்களுக்குரிய பல்வேறு தீர்வுகளைப் பெற இயலாத நிலையிலேயே குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் பெண்கள் உள்ளனர்.
இந்தப் பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வருகின்ற நிறுவனங்கள் கொடுத்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றன. எனினும்...
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் நிதி உதவியுடன் மன்-அல்-அஸ்ஹர்.ம.வி தேசிய பாடசாலையில் நீர்த்தாங்கி ஒன்று நேற்று (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் மற்றும் மன்னார் பொது சமூக சேவைகள் அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு நீர்த்தாங்கியினை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும்...
குருநாகல் - கஹட்டகஹா மைன் பைட் சுரங்க பணியாளர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் தமக்கு வழங்கப்படும் புத்தாண்டு கொடுப்பனவை இந்த வருடமும் வழங்கக் கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 சுரங்கப் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்ததுடன் இந்த வருடம் அது வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சுரங்கப் பணியில்...
யாழ்.மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் குறித்த வெடி பொருட்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில்...
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் ஜெர்ஸி எண் பின்னணியிலும் சுவாரஸ்யங்கள் அல்லது ஏதேனும் இரகசியங்கள் இருக்கிறதா என்பது கேள்வி குறி தான். ஆனால், பெரும்பாலான இந்திய வீரர்களின் ஜெர்ஸி எண்ணின் பின்னணியில் ஏதேனும் ஒரு காரணம் இருக்க தான் செய்கிறது.
பிறந்தநாள், வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், ஜோதிடர் வாக்கு, சாதனையை குறிக்கும் எண், தங்களுக்கு பிடித்தமானவர்களின் எண் என கிரிக்கெட் வீரர்களின் ஜெர்ஸி எண்ணின் பின்னணியில் பல காரணங்கள் புதைந்திருக்கின்றன....