ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹற்றன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியை ஏற்றிசென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் லொறியில் சென்ற மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சாரதிக்கு நித்திரை வந்தமையே விபத்துக்காண காரணம் என பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன்...
வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் “செப்பல் சி 3” சிறைக்கூடத்திலிருந்து 15 கைப்பேசிகளை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் 3எ ரக உயர் தொழில்நுட்பம் கொண்டவையும் இருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
செப்பல் சி 3 சிறைக்கூடத்தில் நூறு மரணதண்டனைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அந்தச் சிறைக்கூடத்தின் சுவர்களிலும் தரைக்குக் கீழும் ஆங்காங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விஜயம் செய்து பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா வீதியில் இடம்பெற்றது.
மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கு வாழ் முஸ்லிம் மக்கள்...
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை! கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன
Thinappuyal -
பிரிக்க முடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில். ஒற்றையாட்சி என்ற பதமே புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அதேவேளை அதிகாரங்களை வலது கையால் வழங்கி தேசிய கொள்கைகளின் பெயரால் இடது கையால் பறிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ்...
அரசியலமைப்புச் சபை பிரதிநிதிகள் கூடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையின் பிரதிநிதிகள் இந்தப் பணிக்காக ஒன்று கூடுவது தொடர்பிலேயே தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு புறம்பான வகையில் இந்த உறுப்பினர்கள் கூடி ஆராய்வதற்கும் அதற்காக கொடுப்பனவு ஒன்றை வழங்கவும் முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் யோசனையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதனால் அரசியலமைப்புச் சபையில் அங்கம்...
கடந்த 27ஆம் திகதி பொலன்னறுவை மனம்பிட்டிய நிஷ்ஷங்கமல்ல பாடசாலையில்யில் பொலிஸ் நடமாடும் சேவை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசார கையேடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் ஜனாதிபதி கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளுக்காக தனது குடும்பத்தினால் உதவி செய்த புகைப்படங்கள் அல்லது பெயர் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அரச கடமை நடவடிக்கைகளின் போது இவ்வாறானவை எதிர்வரும்...
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டுள்ளதனால் இலங்கைக் குடியுரிமையை கோருவதற்கு உரிமையில்லை எனவும்,
குடியுரிமை வழங்கக்கூடிய சாத்தியம் கிடையாது எனவும் சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசுட்டர் ஜெனரல் பிரியந்த நவான நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் குணரட்னம் எனப்படும் நொயல் முதலிகே...
போர்ட்சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் மஹிந்த அமரவீர
Thinappuyal -
போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கொழும்பு பேராயர் காதினல் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,...
எந்தத் தடைகள் வந்தாலும் சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைத்தே தீருவோம்! அமைச்சர் சியம்பலாபிட்டிய
Thinappuyal -
சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் பின்னிற்க மாட்டோம். இதில் காணப்படுகின்ற தடைகளையும் சவால்களையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
“மின்தடை” தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட உறுதி பூணுவோமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரஞ்சித்...
சிவில் யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் 'அநேகமாக தவிர்க்க முடியாதவை' எனக் கூறி யுத்தக் குற்றங்களை அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபோர்ட் நியாயப்படுத்தியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் அகதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் அபோர்ட்டின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தனது இரண்டு வருடகால பிரதமர் பதவி தொடர்பில் 'குவாட்ரன்ட்' சஞ்சிகையில் எழுதியிருக்கும் கட்டுரையிலேயே டொனி அபோர்ட், இலங்கை யுத்தத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
உலகத்தில் மிகவும் மோசமான சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு...