போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஊடகவிலயாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதனை நான் மிகவும் விரும்புகின்றேன். நிமால் சிறிபால டி சில்வா பதுளை மாவட்டத்திற்கு...
சர்வதேச நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், நாடும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கின்றேன். இதற்கு முன்னர் நாம் கொண்டு வந்த அரசியலமைப்பை விட வித்தியாசமானதாக இம்முறை...
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 8698 பாடசாலை பரீட்சார்த்திகள் அனைத்து பாடங்களிலும் சித்தியெய்தவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 பாடங்களிலும் இந்த மாணவர்கள சித்தியெய்தவில்லை. கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து ஏழுநூற்று இருபத்து நான்கு பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 8147 பாடசாலை பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும்...
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் காணப்படும் எலிகளை வேட்டையாட கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை வடிகாண்கள் மற்றும் கைதிகள் தடுப்பு அறைகள் என்பவற்றினுள் ஏராளமான எலிகள் சுதந்திரமாக உலாவி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை நிர்வாகம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினரைக் கொண்டு எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வரலாற்றில் வெளியிலிருந்து அதிகாரிகளை அழைத்து...
பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்… பண்டிகைக் காலத்தில் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்களினால் மின்சாரத்தை சேமிக்கும் நீண்ட கால திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில்  பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி...
    அரசிலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதித்துவம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இனங்களுக்கிடையில் கசப்புணர்வினை ஏற்படாத வகையில் அது உருவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு...
    எனது மகளை இராணுவ உடையில் வந்தவர்கள் தான் பிடித்து சென்றனர். காசிப்பிள்ளை ஜெரோனியின் தாயார் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், நாங்கள் 2009 ஆம் ஆண்டு நடந்த சேல் தாக்குதல் காரணமாக...
மீள்பார்வை நன்றி முஸ்லீம் அரசியல் வாதிகள் ரிஸானா நபீக் இன் பெயரை சொல்லி பிளைப்பு நடத்தி வந்தமைக்கான வீடியோ ஆதாரத்துடன் ரிஸானா நபீக் தாயார் -இதைவிட நீங்கள் பிச்சை எடுக்கலாமே பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத் தாய் சுதந்திரம் அடைந்த தினம். இதே தினத்தில் ரிஸானா நபீக்கை இலங்கைக்கு ஈந்த ரிஸானா நபீக்கின் தாய் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் விலங்கிடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பின்னர் அறிய முடிந்தது. இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், தாய்,...
  உடல் அலுப்பைப் போக்க,என்றும் இளைமையோடு இருக்க,வாளிப்பான உடல் மற்றும் பளீரிடும் முக அழகைப்   பெற சிகிச்சை தரும்  மசாஜ் மற்றும் ஸ்பா  மையங்கள் மத்தியில் பிலிப்பைன்ஸின் `மலைப் பாம்பு மசாஜ்` வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. வித்தியாசமான இந்த மசாஜ் முற்றிலும் மலைப்பாம்புகளால் மட்டுமே செய்யப்படுவது ஆகும். ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ்  உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல நூறு தீவுகளைக் கொண்ட அழகிய  நாடு. நான்குபுறமும் கடலால் சூழப்பட்ட...
இலங்கை இராணுவத்தின் இனப்படுகொலைக்கான மற்றுமோர் ஆதாரம் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு ஓட்டிசுட்டான் பகுதியில் புதைக்கப்பட்டனர்