ஐரோப்பிய ஒன்றிய மீன் தடை குறித்து ஆராய்வதற்கு இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்த நிலையில் குறிந்த பயணமானது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி வரை .குறிந்த கலந்துறையாடல் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக குறித்த கலந்துறையாடல் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் செயலணியைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த...
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் இரு பௌத்த மதகுருமார் உள்ளிட்ட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி  வீதியைப் புனரமைத்து தருமாறு கலாபேபஸ்வேவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மக்கள் வீதிப் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் ஏ9 வீதி உள்ளிட்ட வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் நீதிமன்றின்...
இலங்கையின் பல்வேறு நகரங்களில் இடம்பெறும் திடீர் மின் விநியோகத் தடையின் பின்னால் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் இடம்பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. தனியார் டீசல் மின் நிலையங்களில் அதிக விலைக்கு மின்சாரத்தை பெற்றும் கொள்ளும் நோக்கில், சூழ்ச்சியான முறையில் மின்விநியோக தடை இடம்பெறுவதாக பல தரப்பினரினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மின் விநியோக தடை செய்யப்படாதென மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்த போதிலும் கொழும்பு நகரத்தில் பல இடங்கள்...
புத்தளம் பகுதியில் நுகர்வோர் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் 16 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. புத்தளம்-மதவக்குளம் மற்றும் ஆடிகம பகுதிகளைச் சேர்ந்த 16 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 16 வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சுகாதார பரிசோதகர்களால் குறித்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த வர்த்தக நிலையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பாவனைக்குதவாத உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்து அவற்றை அழித்துள்ளதாக...
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அச்செயலாளரின் நிர்வாக மந்த நிலையைக் கண்டித்து பிரதேச சபைக்கு முன்பாக இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் பிரதேச சபை முன்றலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். மோசடி செய்த செங்கலடி பிரதேச செயலாளரை உடனடியாக மாற்றம் செய்யவும், விவேகமில்லாமல் கடமையாற்றும் செயலாளரே உடனடியாக வெளியேறு, நடத்து, நடத்து ஊழலுக்கொதிரான...
பிரித்தானிய பெண்மணி ஒருவர் சுற்றுலா கப்பலை துரத்திப் பிடிக்கும் பொருட்டு கடலில் தனியாக நீச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியான 65 வயது சூசன் பிரவுன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் பிரவுன் ஆகியோர் சொகுசு கப்பல் ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர். 32 நாள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்தில் இருந்து சில காரணங்களால் 28-வது நாளில் இருவரும் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ள புராதன தளங்களை புதுப்பொலிவுடன் மீட்டெடுக்க சிரியா அரசு முடிவு செய்துள்ளது.சிரியாவின் மிக புராதன தளமாக விளங்கிய Palmyra பகுதி ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இதுவரை இருந்து வந்தது. கூட்டுப்படைகளின் தொடர் நடவடிக்கையின் பலனாக தற்போது அந்த பகுதி சிரியா படைகளின் வசம் திரும்ப வந்துள்ளது. ஐ.எஸ்.அமைப்பினரின் அதிகாரத்தின் கீழ் இருந்த போது Palmyra பகுதியில் அமைந்துள்ள புராதன சின்னங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்து வந்தனர். இதனால்...
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு அந்நாட்டு குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் நிரந்திர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யும் புதிய சட்டம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே காட்டுகிறது. இந்நிலையில்,...
இந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் வெளிச்சம் கூட இல்லாமல், இருட்டாக காணப்படும், அதில் இந்நோயாளிகளை கையில் விலங்குகள் போன்று அடைத்து வைத்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. டவுன் சின்ட்ரோம் (Down's...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் பெண்ணை கடத்திச் சென்று இளைஞன் ஒருவர் சிறை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டோக்கியோவில் Ana Saito என்ற 15 வயது இளம் பெண் ஒருவர் அவரது குடியிருப்பு பகுதியில் இருந்து திடீரென்று மாயமானார். அந்த இளம் பெண் மாயமானது குறித்து விளக்கமளிக்கும் வகையில் இனிமேல் தம்மை தேட வேண்டாம் என ஒரு குறிப்பும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கப்பெற்றது. இதனிடையே இந்த குறிப்பு குறித்து சந்தேகம்...