சைப்ரஸ் நாட்டில் புகலிடம் கோருவதற்காக பயணிகள் விமானத்தை கடத்தியதாக எகிப்து நாட்டு பிரஜை பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்றாம் இணைப்பு: எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட EgyptAir என்ற விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் ஒன்று கடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விமானிகள் உட்பட 81 பயணிகள் இருந்த அந்த விமானம் கெய்ரோ நகருக்கு செல்லாமல், ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் தனி நபர் ஒருவர்...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் உட்பட வேறு சிலரும் பங்குபற்றியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதியதொரு கூட்டணியினை அமைக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு...
இலங்கையின் யுத்த வரலாற்றில் காணாமற்போனோர் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் பதிவுகளை திரட்டும் நடவடிக்கை இவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதியின் காணாமற்போனோர் ஆணைக்குழு செயற்பட்டுவருகின்றது. இவர்கள் தொடர்பாக வடகிழக்கில் 25இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்துடன் 15இற்கும் மேற்பட்ட மகஜர்கள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதப் போராட்டங்கள் கூட மேற்கொள்ளப்பட்டது. வெறுமனே இவையணைத்தும் ஒரு...
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோப் குழுவினால் அரச நிறுவன அபிவிருத்தி அமைச்சுக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தனவினால் குறித்த வங்கிக்கு பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 62 பேர் அடிப்படை தகுதிகளின்றி தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் லங்காபுத்ர வங்கியின் தலைவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப வங்கிக் கடன்களை வழங்குவதோடு, மிகவும் குறைந்த வட்டி விகிதங்களில் வழங்குவதாகவும்...
தாய்க்கு அடுத்தபடியாக பசுவை போற்றும் மரபு தமிழ் மக்களுடையது. பாலைப் பொழிந்து தரும் பசுவை தாயாகப் போற்றுகின்ற தமிழ் இனத்தில் இன்று மாட்டிறைச்சிக் கடைகளுக்கு குறைவே இல்லை. இத்தகைய அபத்தமான நிலைமை எதிலும் கவனமற்ற சைவத் தமிழர்களால் ஏற்பட்டதுதான். ஆமையை இறைச்சிக்கு வெட்டினால் அது கடும் குற்றம். கெளதம புத்தபிரானின் ஒரு அவதாரம் என்ற அடிப்படையில் ஆமைக்குப் பாதுகாப்பு. அதேபோல் பன்றி இறைச்சிக் கடைக்கு அனுமதியே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு ஒவ்வாது...
பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந் நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் மின் பிறப்பாக்கியில் விபத்து இடம்பெற்ற மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். மின் பிறப்பாக்கிகளை இலக்கு வைத்து, நாசகார கும்பல் ஒன்று...
இந்த வருடத்தில் பருவ மழைக் காலம் வந்துவிட்டது, மழை வருவதற்கு முன்பாகவே டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திட்டத்திற்காக இந்த வாரத்தினை நுளம்பு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதாக காதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன் 12,569 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 51.71 வீதமானோர் டெங்கு...
எனது கணவரை வவுனியா, கல்மடு - ஈச்சங்குளம் வீதியில் வைத்து 57வது படைப்பிரிவு இராணுவம் வெள்ளைவானில் கடத்திச் சென்றதை கண்டதாக மனைவி பேரின்பராஜா பாலேஸ்வரி காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், நாங்கள் முல்லைக்குளம்,...
ஆணைக்குழுவின் ஊடாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு மேலதிகமாக இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே அவர்கள் கேள்விகள் கேட்பதை அவதானிக்க முடிந்ததாக அங்கு சென்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். விடுதலைப்புலிகளை LTT என்று ஆங்கிலச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். CID யினரை அழகான தமிழில்  புலனாய்வாளர்கள் என்றும் கூறப்பட்டதாக அங்கு சென்றோர் தெரிவித்தனர். மக்கள் மத்தியில் LTTஎன்னும் சொல் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கும் CID என்னும் சொல் மக்கள் அச்சத்துடன் வெறுப்புடனும் பயன்படுத்தும் சொல்லாகவே இருக்கின்றது. ஆணைக்குழுவின் விசாரணையில் மக்கள் முன் பயன்படுத்த...
மயிலை வேட்டையாடிய நபர் தொடர்பில் நேற்று இணைய செய்திகளில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியிருந்தது. இதன்பிரகாரம், குறித்த நபர் தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மருமகன் என்ற விடயம் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆனமடுவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி மயிலை வேட்டையாடியுள்ளதுடன், அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக...