இந்த நிலையில் தலவாக்கலை நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தலவாக்கலை மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் அடிப்படை வசதிகளில் பின் தங்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றமையை கண்டறியப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட பகுதிகளை உள்ளடக்கிய தோட்டப் பிரிவுகளில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகங்கள் இனங்கண்டு செய்வதில் அக்கறை காட்டுவது மிக குறைவாக இருக்கின்றது.
அந்த வகையில் தலவாக்கலை மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் வீடு, குடிநீர், மலசலகூடம், மைதானம், வீதிகள்...
உலகக்கிண்ண டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்கள் சந்திமலும் (21), டில்ஷனும் (36) அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள்.
ஆனால் அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்...
நோர்வூட் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு அட்டன் மாவட்ட நிதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
28.03.2016 அன்று மாலை நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சம்பவயிடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தவிட்டார்.
திடீரேன பெய்த அடை மழையின் ஆற்று வெள்ளத்தில் மீட்கப்பட்ட மேற்படி சடலம் அடையாளம் இதுவரையில் காணப்படவில்லை என்றும் நீதவானின் உத்தரவிற்கமைய. பிரேத...
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
எதிர்வரும் 31ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்ற சந்தேகம்...
விராட் கோஹ்லியை சீண்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் பிளிண்டாப்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான நாக்-அவுட் போட்டியில் தனியாளாக கோஹ்லி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இதனால் அவரை உலகமே பாராட்டி வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பிளிண்டாப் டுவிட்டரில், “கோஹ்லி இதேபோன்று தொடர்ந்து விளையாடினால் ஜோ ரூட்டை போல் சிறந்த வீரராக ஆகலாம்”...
உடலில் ஏற்படும் சிலவித உபாதைகளுக்கு பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.1) தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2) தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
3) வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து...
நாம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களுள் அதிகளவானவை கடைகளில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்தே விற்பனை செய்யப்படும்.இவ்வாறு உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும்போது குறித்த பாத்திரங்களில் காணப்படும் மேற்பூச்சானது உணவுப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது.
இவ் உணவை உள்ளெடுப்பதால் கர்ப்பிணித் தாய்மார்களில் குறைப்பிரசவம் ஏற்படும் என ஆய்வு ஒன்றிலிருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்குமார் மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே...
இந்த சடலம் 29.03.2016 அன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பிரதேச ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றில் சடலமொன்று கிடப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில்...
இனிப்பு சுவையுடைய தின்பண்டங்களை விரும்பாத சிறுவர்கள் இருக்கவே முடியாது. இதனை காரணமாகக் கொண்டு இன்று அவர்களை இலக்காக வைத்தே பல தின்பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவ்வாறே சிறுவர்களுக்காக உற்பத்தி செய்யப்படும் பழ ரசங்களில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும், இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
லிவர்பூல் பல்கலைக்கழகம், குயீன் மேரி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 203 வரையான உற்பத்தி பொருட்களை...
முதற்தர ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HTC ஆனது HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது 15ம் திகதியே அறிமுகம் செய்யப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இக் கைப்பேசியானது 5.1 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm...