என்னதான் நடப்பதும், ஓடுவதும் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் நவீன தொழில்நுட்பங்களின் பயனாக உருவான சாதனங்களை பயன்படுத்துவதற்கு மனிதர்கள் பின்னடிப்பதில்லை.இவ்வாறு இலகுவாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்வதற்கு உருவாக்கப்பட்ட Folding Bikes, Scooters, One Wheelers, Skateboards போன்றவற்றிற்கு சவால் விடும் வகையில் மற்றுமொரு நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இச் சாதனத்தில் காலணியும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள 26 V/26 Ah...
புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப் பிரதேசத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா கடந்த வருடம் பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையானது ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய...
    154 கிலோ எடையுள்ள குா்ஆன் மதீனாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதுந் நபவி வளாகத்தில் திருக்குா்ஆன் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கைகளால் எழுதப்பட்ட 143 x 80 செ.மீ பரப்பளவு கொண்ட இந்த குா்ஆன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. குா்ஆன் இறங்கிய விதம், குா்ஆனை ஓத வேண்டிய விதம், குா்ஆன் கூறும் அறிவியில், பொருளியல், மனிதஇயல் என அத்தனை விஷயங்களும் எழுத்து வடிவிலும் புகைப்படமாகவும்...
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்றும், நாளையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது காணாமல் போனமை தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர்களை சாட்சியமளிக்க வருமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதன்படி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், கடிதங்கள் கிடைக்கப் பெற்றவர்களை வருகை தந்து சாட்சியங்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சிறந்த தலைவர்கள் உருவாவதற்கு காரணமாக அமைவது கல்வியாகும். இந்த கல்வியை மேம்படுத்த புதிய கொள்ளைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்...
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 148 ரூபாவினை தாண்டிச் சென்றுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 148 ரூபாவாக பதிவாகியிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 148.91 ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ரூபாவின்...
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்கு உள்ளுர் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம் நுரைச்சோலை பகுதிக்கு மூதூர் கிழக்கு பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று திங்கட்கிழமை அங்கு சென்று திரும்பியுள்ளது. அனல் மின் நிலையத்தை உள்ளே சென்று பார்வையிடுவதற்கான...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தி இரண்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா...
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் மதிக்கப்படவில்லை. பசில், கோத்தபாய ஆகியோர் தன்னிச்சையாகச் செயற்பட்டனர். அதனை மகிந்த கட்டுப்படுத்தவில்லை. இறுதியாக இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவருமான, தயான் ஜயதிலக இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், போர்க்காலத்தில் மகிந்தவுக்கு பெரும் உதவியாக இருந்த சகோதரர்கள் போருக்குப் பின்னர் பலம் படைத்தவர்களாக...
இலங்கை, இந்தியா உட்பட தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகுந்த உபத்திரவம் தருவதுண்டு. வருடம் தோறும் மார்ச் மாத நடுப்பகுதி நெருங்கியதும் உஷ்ணம் ஆரம்பமாகிவிடும். இந்த வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து சென்று ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்டுவிடும். மே மாதம் தொடங்கும் வரை அதிகரித்த உஷ்ணத்தையும், அதன் விளைவினால் ஏற்படுகின்ற உபாதைகளையும் மக்கள் எவ்வாறேனும் தாங்கித்தான் ஆக வேண்டும். இலங்கையைப் பார்க்கிலும் இந்திய மக்கள் அனுபவிக்கின்ற கொடுமை அதிகம்....