வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் Goat. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாஸ் அப்டேட் ஏப்ரல் மாதத்தில் இருந்து Goat படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். குறிப்பாக இப்படத்தின்...
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கம் போல் லோகேஷ் ஸ்டைலில் மாஸான டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை நாம் அனைவரும் பார்ப்போம் என்றும்,...
  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்து கொண்டிருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். பாலிவுட் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் கியாரா அத்வானிக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கியாரா அத்வானி கமிட்டாகியுள்ள புதிய படம் குறித்து தகவல்...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் மணிமேகலை. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய பின் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் கடந்த சீசனில் இருந்து தொகுப்பாளினியாக மாறியுள்ளார். இந்த நிலையில், மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பாலிவுட் நடிகைகளை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகைகளை கலாய்த்த மணிமேகலை விமான நிலையில், பாலிவுட் நடிகைகள் வந்த என்ன நடக்கிறதோ, அதை நகைச்சுவையான முறையில் நடித்துள்ளார். பாலிவுட்...
  உலகளவில் உள்ள அனைத்து இசை ரசிகர்களின் மனதிலும் வருடிய ஒரே புயல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்பட்டு வரும் இவர் சமீபத்தில் தான் ஆடு ஜீவிதம் படத்திற்கு இசையமைத்திருந்தார். இசையமைத்தார் என்று சொல்வதை விட, அப்படத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் என்று சொன்னாலும் மிகையாகாது. அடுத்ததாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராயன், காதலிக்க நேரமில்லை, ஜீனி, தக் லைஃப், ராம் சரண் 16 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. ஏ.ஆர். ரஹ்மான்...
  பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்ப்பதை தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் திகதி மதுரையில் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் திகதி துவக்க பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும்...
  ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.பிரந்திய வலயம் முழுவதிலும் மழை பெய்யும் என சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை 25 முதல் 50 மில்லி மீற்றர் வரையில்...
  சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் புரட்சிப் படையின் முக்கிய தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான யுத்தம் உக்ரம் அடைந்து, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சிரியா, ஈரான் நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் வெளிப்பாடாக, சிரியாவில் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே கடந்த 30 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி...
  சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் இன்று விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான்கு சுற்றுலாப் பயணிகள், ஒரு வழிகாட்டி மற்றும் விமானியுடன் பயணித்த ஹெலிகாப்டர், உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை, விபத்தில் உயிரிழந்த மூவரும் சுற்றுலாப் பயணிகளா என்பது...
  முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் நான்கு ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளது. பொலிஸாரின் பயன்பாட்டுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் கொள்ளைகளை தடுப்பதற்கும், காணாமல் போனவர்களை தேடுவதற்கும் இந்த நான்கு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன. ரொறன்ரோ, பீல், ஹால்டன் மற்றும் டர்ஹம் பிராந்திய பொலிஸார் இணைந்து ஹெலிகொப்டர் பொலிஸ் சேவையை வழங்க உள்ளனர். இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு 36 மில்லியன் டொலர் நிதி செலவிடப்பட...