குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது குறித்து ஆராய்வதற்காகவும் எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் யாழில் இடம்பெறவுள்ளது. பலாலி இராணுவத் தலைமையகத்தில் 15ம் திகதி பிற்பகல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர். தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில்...
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறித்த விஜயத்தின் போது ஜெய்சங்கர் இலங்கையின் அரசாங்கத்தரப்பினருடன் கலந்துரையாடல்களை  நடத்தவுள்ளார். இதேவேளை, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜின்...
இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா, இலங்கையின் பாரிய முதலீட்டாளராக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தென்னிலங்கையில் 2.5 பில்லியன் டொலர்கள் முதலீட்டுடன் அமெரிக்கா,  எரிபொருள் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவுள்ளது. இந்த முதலீடுகளை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ப்ளுர் கோப்பரேசன் உட்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன. ப்ளுர் கோப்பரேசன், உலகளாவிய...
இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை பாகிஸ்தானிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என பாகிஸ்தான் டுடே தகவல் வெளியிட்டுள்ளது. லாகூர் விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 107 ஹெரோய்ன் உள்ளடக்கப்பட்ட வில்லைகள் கைப்பற்றப்பட்டன. இந்த ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி பல்லாயிரம் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹனீப் மற்றும் ஜாவிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பரீட்சை விடைத்தாள்களை மீளவும் மதிப்பீடு செய்ய வேண்டுமென விரும்பும் பரீட்சார்த்திகள் பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான மீள்மதிப்பீட்டு விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை. பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம்...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது. யுத்தத்தில்      பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேச மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு கற்றலை வழங்கும் பொருட்டு...
புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய சேவைகளும் கடந்த வியாழனன்று மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டன. பிபிசியின் ஐபிளேயர் காணொளி சேவையும் வானொலி சேவைகளும் கூட இயங்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த முயற்சிகளுக்குபின் இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. தொழிற்நுட்ப...
  சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்-------- ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும் இலட்சத்தை தாண்டி விட்டது ..ஆனாலும் இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக நாடுகளும் நினைக்கவில்லை போலும்..ஈதியோப் பாவின் ,சோமாலியாவின் வறுமை என்பது ஏதோ நிலையான் ஆட்சி இன்மை மற்றும் ஆயுதங்களால் தான் என்று நாம் தினம் தினம் பேசுகின்றோம் ஆனால் நாம் அனைவரும் மறந்த மற்றும் பத்திரிக்கைகள் மறைத்த செய்தி என்னவென்றால் அங்குள்ள பசி பஞ்சத்திற்கும் ஆயுத கலாச்சாரத்ரிகும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்...
    2001 இல் சம்பந்தன் 40,110 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்தில் வந்தார். 1889 - 2000 காலப் பகுதியில் வி.புலிகள் கை ஓங்கியிருந்த காலம். தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு அச்சுறுத்திய காலம். 1994 இல் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத் தேர்தலை வி.புலிகள் புறக்கணித்ததால் சொற்ப வாக்குகளைப் பெற்ற டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி 9 இருக்கைகளை வென்று நாடாளுமன்றம் சென்றது. 1994 இல் சம்பந்தனுக்கு 19,525 வாக்குகள் கிடைத்தது. மறுபுறம் கஜேந்திரகுமார் புலிகளின் ஆதரவோடு...