தொடர் தோல்விகள்…சொதப்பும் துடுப்பாட்ட வீரர்கள்: வேதனையில் தவிக்கும் தென் ஆப்பிரிக்கா
Thinappuyal -0
தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த தொடல் தோல்விகளால் அணித்தலைவர் ஆம்லாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் தோல்விகள்
டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, 2015ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த வெற்றியும் பலமிழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானது.
மழை பாதிப்பால் வங்க தேசத்துக்கு எதிரான 2 போட்டியையும், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியையும் டிரா செய்திருந்தது. 3 டெஸ்டில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. கடைசியாக...
அனிருத் தற்போது வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பீப் சாங் சர்ச்சையில் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
அனிருத் மற்றும் சிம்பு இருவரும் ஜனவரி 2ம் தேதி நேரில ஆஜராக வேண்டும் என்று முன்பே போலிஸார் கூறினர்.
இந்நிலையில் அனிருத் தரப்பில், இன்னும் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். மேலும், அனிருத் இந்த பாடலை பாடவில்லை என சிம்புவே கூறிவிட்டார்.
இதனால் சிம்பு கூறியதை சுட்டிக்காட்டி அனிருத்தின் வழக்கறிஞர்...
அஜித் எப்போதும் தனக்கு பிடித்தவர்களிடமே இணைந்து பணியாற்றுவார். மேலும், இளம் இயக்குனர்களுக்கு அவர் முன்பு வாய்ப்பு கொடுத்து பல படங்கள் தோல்வியடைந்தது.
இதனாலேயே தற்போது பார்த்து பார்த்து தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழில், கார்த்திக் சுப்புராஜ்சமீபத்தில் அஜித்தை சந்தித்து கதை கூறியதாகவும், அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இக்கதையில் தற்போது ராகவா லாரன்ஸ்நடிக்கவிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் ஏற்கனவே ஆஸ்கர் நாயகன் ரகுமான்கமிட் ஆனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் மற்றுமொரு ஆஸ்கர் நாயகன் இணையவுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை ரகுமானுடன் இணைந்து ஆஸ்கர் வென்றரசூல் பூக்குட்டி அவர்கள் தான்.
இதை அவரே உறுதி செய்துள்ளார். மேலும், இதற்காக இவர் விரைவில் ஷங்கரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் ஏற்கனவே ஆஸ்கர் நாயகன் ரகுமான்கமிட் ஆனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் மற்றுமொரு ஆஸ்கர் நாயகன் இணையவுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை ரகுமானுடன் இணைந்து ஆஸ்கர் வென்றரசூல் பூக்குட்டி அவர்கள் தான்.
இதை அவரே உறுதி செய்துள்ளார். மேலும், இதற்காக இவர் விரைவில் ஷங்கரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை வெடிக்குண்டு ரூபத்தில் வெடித்துள்ளது.
சென்னை போரூரில் உள்ள டி.ராஜேந்தர் பங்களாவில் வெடிக்குண்டு வெடித்துள்ளது என யாரோ, காவல்த்துறையினரிடம் கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட உடனே அந்த இடத்திற்கு போலிஸார் செல்ல அப்படி குண்டு வெடித்ததற்கான அறிகுறியே இல்லை.
இதை தொடர்ந்து பேசியது யார் என்று போலிஸார் அந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போது ஒரு பெண் பேசியுள்ளார்....
சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கு சந்தோஷம் என்றாலும், சிலருக்கு கஷ்டத்தை கொடுக்கும் போல. சமீபத்தில் ரஜினி முருகன் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் படம் தள்ளிப்போகின்றது என யாரோ கிளப்பிவிட்டுள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன் இதை பற்றியெல்லாம் கவலையேபடவில்லை.
பேசுபவர்கள் பேசிட்டு போகட்டும், சொன்ன தேதியில் வருவோம் என மீண்டும் இன்று படத்தின் விளம்பரத்தில் பொங்கல் வெளியீடு என கொடுத்துள்ளனர்.
60கிலோ 300கிராம் நிறையுடைய சந்தன மரத்துண்டுகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சந்தன மரத்துண்டுகள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தன மரத்துண்டுகளின் பெறுமதி மூன்று லட்சம் எனக் கூறப்படுகிறது.
கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த நபரொருவர் குறித்த சந்தன மரத்துண்டுகளை பொட்டலங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
தற்போதும் ஜனாதிபதியுடன் நான் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிளவும் ஏற்படவில்லை.
கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை வந்தடைந்தார்.
கடந்த 10 நாட்களாக பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த பிரதமர், இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஏயார் லயின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.