இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பாரியளவு கடன் சுமையில் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வருமான வரித் திணைக்களத்திற்கு 315 மில்லியன் ரூபாவும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு 13 மில்லியனும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே கொடுப்பனவுகளை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்க பிரஜையான சொரோஸ் ஹங்கேரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ஹொங்கொங் இலிருந்து இலங்கையை வந்தடைந்த அவருடன் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பிரதிநிதிகளை அழைக்கும் பகுதியில் அவரை வரவேற்பதற்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர் வரவேற்கப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிவைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கனரக வாகனம், கடந்த 28ஆம் திகதியன்று இரவு இசைக்கருவிகளை ஏற்றிச் சென்ற நிலையில் ஏ 340 விமானத்தில் மோதியுள்ளது.
இதன்போது விமானத்தின் இடதுபக்க இறக்கை பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுக்கும் வியட்நாம்
தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனாவின் செயலுக்கு வியட்நாம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் வியட்நாம் நாட்டிற்கும் கடந்த பல ஆண்டுகளாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவான ஸ்ப்ராட்லி(Spratly) அருகே சீன சட்டவிரோதமாக அமைத்துவரும் விமான தளத்தில் தனது விமானத்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
இதற்கு...
புத்தாண்டு தினத்தில் 804 கார்களை எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில் பதற்றம்
Thinappuyal -
பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 804 கார்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம், இஸ்லாமிய மத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
எனினும், அரசின் கவனத்தை ஈர்க்க புத்தாண்டு தின நாட்களில் வருடந்தோறும் போராட்டம் தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தினத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்...
புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயரை சரமாரியாக சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்: மெக்சிகோவில் பயங்கரம்
Thinappuyal -
மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் டெமிக்ஸ்கோ என்ற நகர் அமைந்துள்ளது.
ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மேயராக Gisela Mota என்ற பெண்மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மெக்சிகோ நாட்டின் ஜனநாயகப்...
புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய சேவைகளும் கடந்த வியாழனன்று மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டன.பிபிசியின் ஐபிளேயர் காணொளி சேவையும் வானொலி சேவைகளும் கூட இயங்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பலத்த முயற்சிகளுக்குபின் இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. தொழிற்நுட்ப கோளாறு...
அமெரிக்காவில் பெண்கள் கும்பல் ஒன்று கர்ப்பிணி பெண் ஒருவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் New Jersey மாகாணத்தில் கர்ப்பிணி பெண், தனது தோழியுடன் காருக்கு அருகில் வந்தபோது, 5 பேர் கொண்ட பெண்கள், அப்பெண்ணை ஓட ஓட விரட்டுகின்றனர்.
காரினை சுற்றி ஓடிய அப்பெண் ஒரு கட்டத்தில் கீழே விழுகிறார், கீழே விழுந்த அந்த கர்ப்பிணி பெண் "என் குழந்தை" என்று சத்தமிட்டுக்கொண்டே, அவர்களுடன் எதிர்த்து போராடுகிறார், ஆனால் அந்த பெண் கும்பல்...
தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள 617 ஏக்கர் காணியினை கடற்படைக்கு வழங்குவது தொடர்பிலான கூட்டமொன்று, முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தலைமையில் சனிக்கிழமை...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் விண்வெளி பாதையில் சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24–ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
செவ்வாய் கிரகத்தை அந்த விண்கலம் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
காற்று மண்டலம், மீத்தேன் வாயு உள்ளிட்டவை குறித்து அந்த விண்கலம் ஆய்வு...