வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும்... தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தினதும் அன்பான புதுவருட நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் சாந்தி, சமாதானம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாக இவ்வருடம் அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். - நிர்வாகம் -
  வடமாகாண சபைக்காக இவ்வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 92 வீதமான நிதி இன்று வரையில் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. பெருமளவு நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. புதிய வருடத்துக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் இரு வாரங்களுக்கு முன்னர் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2015ம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 92வீதமளவில் இன்று வரையில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டராங்களில் தகவல் கசிந்துள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஓரம் கட்டப்பட்டு வருவதை நிதர்சனத்தில் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தேர்தலின் பின் கூட்டமைப்பு...
  ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐரோப்பிய நாட்டிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய வேளையிலேயே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். கலப்பு நீதி மன்றம் ஒன்றை உருவாக்கி யுத்த வெற்றியை பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை...
  தேசியத்தலைவர் என்று கூறுகின்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான்! சீ.வீ.கே.சிவஞானம் தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான், அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை, அதற்கு பின்னும் என்னுமொரு தேசியத்தலைவர் உருவாகப் போவதில்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை...
குழந்தை பெறுவது அதிகமானால், ஆட்களுக்கு உணவு போதவில்லை, குழந்தை பெறுவதை குறைத்தால், உழைப்பதற்கு ஆட்கள் போதவில்லை என மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது சீனா. வரும் ஜனவரி 1 முதல் ஒரு தம்பதி இரண்டு குழந்தை வரை பெற்றுக் கொள்ளலாம் என சீனாவில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது. இதற்கு காரணம், 1978 முதல் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்து வந்தது. அது பல சர்ச்சைகளை...
போராளிகளாகும் ஆசையில் ஐ.எஸ்.குழுவில் இணைந்த ஆஸ்திரியா இளம்பெண்களை செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஆசையில் சமரா மற்றும் சபீனா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியேறிய இவர்கள் இருவரும் ஐ.எஸ்.குழுவில் இணைந்து அவர்களின் இணையத்தளத்தில் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கும் நிலைக்கு எட்டினர்.இந்நிலையில் 17 வயதான சமராவுக்கு ஐ.எஸ்.குழுவினரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே அங்கிருந்து...
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி முகாம்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் புத்தாண்டு அன்று பட்டாசுகள் மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வெடிபொருட்களை வெடிக்க தடை விதித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இந்த அதிரடி தடை நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் ஜேர்மனியின் Rhine-Westphalia மாகாணத்தில் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். இந்த தடை குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்ட அந்நாட்டு அரசு, ‘அகதிகள் முகாம்களில் அல்லது முகாம்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடித்து...
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இருந்து மீளாத மக்கள் புத்தாண்டு தினத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் எதிர்க்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நகரங்களை ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வருடந்தோறும் கலை கட்டும். ஆனால், இந்த 2016ம் ஆண்டு புத்தாண்டு பிரான்ஸ் குடிமக்களுக்கு, குறிப்பாக பாரீஸ் நகர மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய...
கொலம்பியாவின் Magangue பகுதியில் 11 வயது மகனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தாயாரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Magangue பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் 11 வயது சிறுவனை காலில் விலங்கு வைத்து சங்கிலியால் பிணைத்து தாயார் கொடுமை படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த பொலிசார், குறிப்பிட்ட அந்த குடியிருப்புனுள் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாக...