யாழ்.கொழும்புத் துறை பகுதியில் சட்டத்திற்கு மாறாக விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், குறித்த மதுபானங்களை மறைத்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக அதிகளவான சாராய போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு...
  எதிர்வரும் பண்டிகைக்காலங்களுக்கான வியாபார நடவடிக்கைகள் மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. மன்னார் மக்கள் எதிர்வரும் நத்தர் புதுவருட பண்டிகைகளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் நகர சபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைத்துள்ளனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் நகர சபையினால் இம்முறை குத்தகை...
  தெற்கு அதிவேக வீதியின் கொடகம நுழைவாயில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேல் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும், சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் தாம் வாகன நெரிசல் காரணமாக காத்திருக்க நேர்ந்ததாக, நுழைவாயிலுக்கு வெளியில் வரும் சாரதிகள் தெரிவிக்கின்றனர். தெற்கு...
  வடக்கில் நடைபெறும் அரசாங்கத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் நோர்வேயின் உளவாளி ஒருவர் கலந்து கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் பெண் அரசியல்வாதியொருவரே குறித்த நோர்வே உளவாளியை இலங்கைக்கு வரவழைத்து, யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக் கொண்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதி ஒருவருடன்...
  மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. பண்டிகைக்காலத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காகவும், எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே  இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
  இலங்கையில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தால் வளம்பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான முஹம்மது நபியின் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்த தினம் இன்றாகும். இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம் எந்த ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டும் கொண்டாட்டங்கள் நடைபெறக் கூடாது. எனினும் பன்முக...
  நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு நேற்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளரை சந்தித்து தமது கோரிக்கையை அடங்கிய மகஜரை கையளித்ததாக அந்த அமைப்பை சேர்ந்த அருட்தந்தை ஷெரீட் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள அவர், தான் அரசியல் கைதிகளில் சுக துக்கங்களை...
  வத்தளை கந்தான பகுதியில் 500 கிராம் ஹேரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளை மறைத்துக்கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். ராகம இராத்மலானை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை...
  பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரத்தினபுரியில் நேற்று முன்தினம் பொதுபல சேனா நடத்திய எழுவோம் தொனிப் பொருளிலான மாநாட்டில் உரையாற்றிய ஞானசார தேரர், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு, தற்போது நாட்டை ஆள்வது ஓரின சேர்கையாளர்களின் அரசாங்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஞானசார தேரரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக்...
  தமிழ் பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு வரும் மக்கள் மன்னார் கடல் பகுதிகளுக்குச் சென்று படகு மூலம் கடலில் சுற்றிப்பார்ப்பதற்கு தொடர்ச்சியாக கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட மக்கள் உற்பட ஏனைய தமிழ் பிரதேசங்களில் உள்ள மக்கள் தாழ்வுபாடு, பேசாலை மற்றும் வங்காலை போன்ற கடற்பகுதிகளுக்குச் சென்று படகில் கடலுக்குச் சென்று கடல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விருப்பத்துடன் செல்கின்றனர். ஆனால் கடற்படையினர் பல்வேறு காரணங்களை...