இதுவரை காலமும் பாராளுமன்ற அமர்வுகளின் போது வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருநாள் வருகைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது...
சில நாட்களுக்கு முன்னர் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பப்பை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகளை 31 வாரங்களாக தாயின் கர்ப்பபையில் வைத்து ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முதலாக கர்ப்பப்பை சிக்கலை குறைத்து கொள்வதற்காக வாய் மூலம் கொடுக்க வேண்டிய மருந்தை யோனி வழியாக அனுப்பி, 31 வாரங்களுக்கு தாயின் கர்ப்பபையில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து பராமரித்தமை சாதனையாக...
பீல்ட் மார்சல் சரத் பென்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என்று “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு” கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பேரேரா வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டே அவர இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
சரத்பொன்சேகா இராணுவத் தலைவராக...
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தினால் விஹாரமகாதேவி பூங்கா, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாரிய வாகன...
தெமட்டகொட பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தெமட்டகொட பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பிரசன்னமான சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
குறித்த இளைஞர்...
25.12.2015 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 23.12.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடதக்கது.
வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஆயுதங்களுடன்
மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தின் எஸ்.ஐ.குமார நலவன்ச தலமையில் ரோந்து சென்ற
போலிசாரே மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிசார் தெரிவிக்கையில்
வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூவரும்
பொலிசாரை பார்த்தவுடன் ஓட முற்பட்டவேளை பொலிசார் சந்தேக நபர்கள் பயணம்
செய்ததாக நம்பப்படும் பட்டா வாகனம் உட்பட 1 பிஸ்ரல்,...
உ
உண்மை வெளிவந்துவிட்டது.
கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து,
மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை,
‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.
☛☛☛
கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு,
கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும்,
முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட,
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்,
தேர்தல் தோல்வியின் பின்,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து,
கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த,
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும்,
தனது மூத்த உறுப்புரிமையை வைத்து,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன,
பேராசிரியர் சிற்றம்பலமும் என,
கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து,
இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி,
இரட்டைவேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில்,
இரகசியக் கூட்டம் போட்டு,
மேற்படி...
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது? சர்வதேசத்தையும் புலம்பெயர் புலிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கில் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
"அரசை எதிர்த்து மக்களை இணைத்துக்கொண்டு போராட வேண்டிய காலம் வந்துவிட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ஆதரவு அணியினரின் ஏற்பாட்டில்...
விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.
ஆனால், அவர் ஒரு பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.