இளைய தளபதி விஜய், சூர்யா ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் இணைந்தும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடைசியாக வேலாயுதம், 7ம் அறிவு படத்தின் போது நேருக்கு நேர் மோதினார்கள். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரின் படங்களும் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் 24 மற்றும்விஜய்யின் தெறி ஆகிய படங்கள் மோதவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இது சாத்தியமாகுமா...
சிம்பு பாடிய பீப் பாடலால் அவர் பெயர், புகழ் அனைத்தும் வீணாகிவிட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த பீப் பாடல் விவகாரம்.
இதில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி கூறுகையில் சிம்பு ஜனவரி 2ம் தேதி ஆஜராக தேவையில்லை என கூறினார்.
இவை சிம்பு தரப்பிற்கு சந்தோஷம் என்றாலும், பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவை கைது செய்ய...
தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது கல்விக்கான தேவைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியை 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும், விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்குமிடங்கள்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் இருவர் லெப்டினன்கள், மற்றும் சாஜன்கள் உள்ளடங்குவதுடன் இவர்கள் யுத்த காலத்தில் இராணுவ புலனாய்வு சேவைகளை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
அது தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐக்கிய...
[
ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள், அவரிடம் இருந்த பணத்தினை தருமாறு அவரை மிரட்டியுள்ளனர், இதற்கு அப்பெண் மறுக்கவே ஒரு நபர் அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிடுகிறார்.
இதனால் நிலைகுலைந்த கீழே விழுந்த பெண்மணி, துணிச்சலுடன் எழுந்து அந்த...
ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனோகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடந்த போது அவர் பதவி விலகினார்.
இதனால் உக்ரைனில் பிரச்சனை ஏற்பட்ட போது மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது புகார் கூறின.
அதாவது சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க முயல்வதாக குற்றம் சாட்டின, அவ்வாறு...
இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும்.உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று மாலை விரைவாகவே சூரியன் அஸ்தமனமாகிவிடும்.
பிலிப்பைன்ஸ் உட்பட...
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவுஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ்...
கொத்துரொட்டி விஷமானதால் 18 வயது பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவம் ஊரகஸ்மங்சந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகனென தெரிவிக்கப்படுகின்றது.
தனது மூத்த சகோதரன் வாங்கி வந்த கொத்துரொட்டியையே குறித்த மாணவன் உட்கொண்டுள்ளான்.
பின்னர் கல்வி நடவடிக்கைகளின் பின்னர் உறங்கச் சென்றுள்ளார். இதன்போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொத்துரொட்டியில் அடங்கியிருந்த அதிகப்படியான ஈஸ்ட் மற்றும் இராசயன ங்களே மரணத்துக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மிகவும் நெருக்கமான நீதவான் ஒருவர் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த இதுவரை காலமும் இந்த விசாரணைகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சரத் என் சில்வாவின் விசுவாசி ஒருவரை...