ந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூட ஏரிச்சல் கலந்த எதிர்ப்பினை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மல்லுக்கட்டுதல் மற்றும் அதனூடான வெற்றி...
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை 90 பேருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதோடு, இதில் 45 அமைச்சர்களும், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 45 பேரும் காணப்படுகின்றனர். தற்போது அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் உள்ளதோடு, 23 பிரதியமைச்சர்களும், 19 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர். இதுதவிர மஹிந்த ராஜபக்ச அணியில்...
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். 6 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியன கூட்டாக ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தங்களது கோரிக்கைகளுக்கான நியாயமான பதில் கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு பதில் கிடைக்காத பட்சத்தில் பாரிய வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் ஊழியர்கள் அறிவித்திருந்துள்ளனர். விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் மற்றும்...
சக மாணவிகள் மாகாண மட்டப் பரீட்சையில் சித்தியடைய மாட்டாய், அடுத்தாண்டும் ஒரே வகுப்பிலேயே மீண்டும் படிக்கப் போகின்றாய் என பகிடி பண்ணியதை தாங்க முடியாத மாணவி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, இணுவில் மத்திய கல்லூரியில் தரம் 09 ல் கல்வி கற்ற மாணவியான சுதாகரன் சுதாஜினி (வயது14)  கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த மாணவி பாடசாலை விடுமுறை...
  மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நிர்மலராஜ் (வயது 32) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், மேற்படி சிறுமியை முறக்கொட்டான்சேனைப் பகுதியிலுள்ள மயானத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சத்துருக்கொண்டான் ஆயுர்வேத வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணி புரியும் மகாலிங்கம் புவி (வயது 35) என்பவர் குருக்கள்மடத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியபோது அவர்களை காப்பாற்ற முற்படுகையில் பின்னால் வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிள் சிற்றூழியரை மோதியதாகவும்...
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று முற்பகல் 11.50 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
  சென்னை எப்.சி கால்பந்து அணியின் அணித்தலைவரான எலானோ ப்ளூமர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவாவில் உள்ள படோர்டாவில் கடந்த 20ம் திகதி இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் தலைவர் எலானோ ப்ளூமர் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியபடி சக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது...
  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய அணிவீரரான அஸ்வின் 419 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இவரது டெஸ்ட் சராசரி 31.68 ஆகும். வங்கதேச வீரர் சகீப்– அல்–ஹசன் 2–வது இடத்திலும், பிராட்(இங்கிலாந்து) 3–வது இடத்திலும், பிலாண்டர்(தென் ஆப்பிரிக்கா) 4–வது இடத்திலும் உள்ளனர். ஸ்டார்க்(அவுஸ்திரேலியா), முகமது ஹபீஸ்(பாகிஸ்தான்), மொய்ன் அலி(இங்கிலாந்து), ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா), மேத்யூஸ்(இலங்கை) ஆகியோர் 6 முதல் 10–வது இடங்களில்...