இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி இருப்போம். துரதிஷ்டவசமாக அரசியல் லாபத்துக்காக, அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ இவ்வினவாதத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...
  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வாகரை கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில்  குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த க.விவேகானந்தராசா (வயது 52) என்பவர் விபத்தில் மரணமடைந்துள்ள அதேவேளை, அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா (வயது 49) காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக...
  வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்படாத நிலையில், நாளைய தினத்திற்குள் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையிலேயே, மலையக மக்களின் சம்பளம் அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அவ்வாறு...
  இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாடியுள்ளார். மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிடும்போதே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு மருத்துவர்களை கடுமையாக சாடியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜேதாச, நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோர் கடன்பட்டு உழைத்த பணத்தைக் கொண்டு மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்...
  வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான  வரவு செலவுத்திட்டம் எந்தவிதமான எதிர்ப்புக்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த 15ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4 தினங்களாக நடைபெற்ற வரவுசெலவு திட்டத்தின் மீதான விவாதத்தை தொடர்ந்து இன்றைய தினம் சபையில் எவ்விதமான எதிர்ப்புக்களுமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. குறித்த வரவுசெலவு திட்டம் கடந்த 15ம் திகதி மாகாணசபையில் முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் செயலகம்...
  யாழ்.குடாநாட்டில் கடந்த 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சகோதரன் காணாமல்போன நிலையில் மனம் உடைந்துபோன நபர் ஒருவர் இன்றைய தினம் வட மாகாண சபைக்குள் நுழைந்து மாகாணசபை தமக்கு என்ன செய்தது? 20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்றைய தினம் மாகாணசபையில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றிருந்த போது மதிய உணவுக்கான...
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் ‘எந்திரன்2’ படத்தில் எமி ஜாக்சன் நடிக்கக் கூடாது என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எமி ஜாக்சன் ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதில் சோனாக்‌ஷி சின்ஹா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் அடக்கம் என்ற நிலையில் எமி ஜாக்சனுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர்...
பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இஸ்லாமிய ஊழியர்கள் தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸில் உள்ள Orly என்ற விமான நிறுவனம் இஸ்லாமிய ஊழியர்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது. தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு...
ஜேர்மனி நாட்டில் சாலையோரம் படுத்திருந்த நபர் மீது காரை ஏற்றி பொலிசார் ஒருவர் கொன்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள Zirndorf என்ற நகரிலிருந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிசார் ஒருவர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார். Nuremberg என்ற நகரை அடைந்த பின்னர் அங்குள்ள ஒவ்வொரு சாலைகளையும் கண்காணித்தவாறு சென்றுள்ளார். அப்போது, சாலையோரமாக படுத்திருந்த 58 வயதான நபர் மீது பொலிசார் வாகனம் ஏறியதாக கூறப்படுகிறது. உடனடியாக காரை விட்டு...
சென்னை வெள்ளத்தில் தத்தளித்த விஷயத்தை விட தற்போது வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் சிம்புவின் பீப் பாடல் விவகாரம் தான். சிம்பு மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாருக்கு நாளை ஆஜராகும்படி கோவையைச் சேர்ந்த காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனிடையில் சிம்பு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துகுமாரசாமி, இந்த வழக்கை ரத்து செய்யவும், காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால் தடை விதிக்கவேண்டும் எனவும் கோர்க்கை மனுதாக்கல் செய்தார். ஆனால் சிம்பு தரப்பில் வைத்த...