ரஜினியின் எந்திரன் 2 இப்போது 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை அண்மையில் சென்னையில் போடப்பட்டது. அதில் ரஜினி, எமி ஜான்சன், ஷங்கர், ஏ.ஆர். ரகுமான், அக்ஷய் குமார், லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது படத்திற்கான பட்ஜெட் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ. 350 கோடியாம், இதனை லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் அவர்களே கூறியுள்ளார்.
தனுஷ் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுப்பவர்அனிருத். இந்நிலையில் அனிருத் தற்போது விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். ஆனால், சமீபத்திய பீப் பாடல் சர்ச்சை அனிருத்தை மிகவும் சோதித்துள்ளது. தனுஷுற்கு என ஒரு நல்ல பெயர் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இதனால், தனுஷ் மீண்டும் அனிருத்துடன் இணைந்தால், தன் பெயருக்கு கலங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, அவருடன் சில காலம் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்ததாக...
என்னை அறிந்தால், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் சமீபத்தில் பீப் சாங் குறித்து தன் முகநூலில் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் இவர் ‘கடந்த 4 நாட்களாக பலரும் என்னிடம் பீப் சாங் கேட்டீர்களா என்று கேட்டனர். நானும் ஒரு வழியாக கேட்டேன். இத்தனை வருடங்களால எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருந்தனர். அவர்களை பார்த்து எத்தனை பேர் பாடல் எழுத வேண்டும்...
நாள் முழுவதும் உற்சாக மனநிலையோடு இயங்கவேண்டுமெனில் அதற்கு உணவுகளும் அவசியம்.ஆகவே ஆரோக்கிய உணவுகளே எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிடுங்கள். சிவப்பரிசி சிவப்பரிசியில் உள்ள ரைபோஃபிளேவின் என்ற விட்டமின் ‘பி’, மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. நம் உடலில் போதுமான அளவு ‘பி’ வைட்டமின் இருக்கும் போதுதான் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், நியூரோடிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ ஆக மாற்றப்படுகிறது. இது நம் மனதை அமைதியடைய வைத்து,...
பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.     இன்று 10.30...
வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு வைத்து 2009 செப்ரெம்பர் 24 ஆம் திகதி நிர்மலாதேவியின் கணவன் கந்தையா குணநாதன் கைது செய்யப்பட்டார். அதன் போது தனது 7 வயது மகளுடன் முகாமில் தனிமையில் இருந்து விடுதலையாகி தற்போது கோவில்புளியங்குளம் பகுதியில்...
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி துஷ்பிரயோகத்துக்குள்ளான ஈராக்கை சேர்ந்த இளம்பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த நாதியா முராத் பாசீ தாஹா என்ற பெண்ணையும் மற்றும் சில பெண்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையிடமான மோசூல் நகருக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கொடூர கொடுமைகளுக்கு ஆளான நாதியா(21) என்ற பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார், இவர், ஐ.நா. மனித...
  மசாஜ் நிலையம் என்ற, பெயரில் பத்தரமுல்லை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது . கடந்த 15 ஆம் திகதி தலங்கம காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது அதன் பெண் முகாமையாளரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பெண்கள் 21 தொடக்கம் 37 வயதுடையவர்கள் என்றும் நுவரெலியா, அநுராதபுரம் மற்றும் கோட்டை பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர். வியாபாரிகளே அங்கு...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப பிரிவு உள்ளடங்களாக ஆறு பிரிவுகளின் அடிப்படையில் இம்முறை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. தொழில்நுட்ப பிரிவின் கீழ் சுமார் 14000 மாணவ மாணவியவர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில்...
இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  எனவே பகைமை அரசியலை கைவிடுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற தேசிய...