மூன்று தசாப்தகாலமாக இடம் பெற்று வந்த யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் ஆகப் போகின்றது. இந்த கொடூர யுத்தத்திற்கு காரணமான தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் போன்ற விடயங்களுக்கு இன்னமும் முடிவு கட்டப்பட்டதாக தெரியவில்லை. வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாராளுமன்றத்தில் வரவு-–செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்காக தங்களது சம்பளங்களை வழங்க கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் மாதம் முதல் தங்களது சம்பளங்களை குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஊடக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அறியாமல் இருந்திருக்கலாம் எனினும், ஐக்கிய இலங்கையில் சுதந்திரத்தை அனுபவித்து வரும் மக்கள் அறிவார்கள். ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஒரு தரப்புடன் மஹிந்த டீல் போட்டிருந்தால் அந்த தரப்பை கடைசிவரை காட்டிக் கொடுக்காத உயர்ந்த உள்ளம்...
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது இந்த செயலகம், எதிர்காலத்தில் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்கம், வன்முறைகளை தடுக்கும் ஆணைக்குழுவை போன்று மேம்படுத்தப்படவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பரிந்துரைகள், போன்றவற்றின் முன்னேற்றங்களையும் இந்த செயலகம் கண்காணிக்கும். ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் இயங்கி வருவதும் இங்கு...
குருணாகல் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று காலை பலியாகியுள்ளனர். குருணாகல் சாராகம என்னும் குளத்தில் மூழ்கி குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 13 மற்றும் 15 வயதான சிறுவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்னர். உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளின் படையானது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் குழந்தைகள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், விற்பனை செய்தும், கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிர்பிழைத்த...
  வரவு - செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 700 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இதன்போது...
  இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுகசங்காரம்! ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலா? - இல்லையென மறுக்கின்றது பொலிஸ் மஹிந்த, கெஹலியவிடம் இன்று மீண்டும் விசாரணை! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை: அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை...
  வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வடமாகாணத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) டெங்கு தொடர்பாக வீடுகள், கடைகள், சந்தை, வியாபாரஸ்தலங்கள், சுப்பர் மார்க்கட் போன்ற பகுதிகளில் அதற்கு முன்பாக இருக்கக் கூடிய நீர்வடிகால்கள் அசுத்தமாகக் காணப்படுகின்றது. நுளப்பு உருவாகுவதற்கான காரணிகளும் உள்ளது. சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று தமது கடமைகளைச் செய்து வருகின்ற போதிலும் தமது பகுதியில் உள்ளவற்றைத் துப்பரவு செய்யாது 'ஊருக்கு உபதேசம் உனக்கென்ன' என்ற பழமொழிக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கரங்களில் இரத்தக்கறைகள் இல்லை என்றும், தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடன் அவர் 'டீல்' (ஒப்பந்தம்) செய்திருந்தார் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத்...