வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வடமாகாணத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) டெங்கு தொடர்பாக வீடுகள், கடைகள், சந்தை, வியாபாரஸ்தலங்கள், சுப்பர் மார்க்கட் போன்ற பகுதிகளில் அதற்கு முன்பாக இருக்கக் கூடிய நீர்வடிகால்கள் அசுத்தமாகக் காணப்படுகின்றது. நுளப்பு உருவாகுவதற்கான காரணிகளும் உள்ளது. சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று தமது கடமைகளைச் செய்து வருகின்ற போதிலும் தமது பகுதியில் உள்ளவற்றைத் துப்பரவு செய்யாது 'ஊருக்கு உபதேசம் உனக்கென்ன' என்ற பழமொழிக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கரங்களில் இரத்தக்கறைகள் இல்லை என்றும், தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடன் அவர் 'டீல்' (ஒப்பந்தம்) செய்திருந்தார் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத்...
வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் இளைஞர்கள் சிலரின் சடலங்களும் அருகில் இருந்தன....
ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை நல்லாட்சி அரசு அமைக்கவுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள், கருத்துக்களை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்தது. இக்குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான பௌசி, டிலான்...
வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கூறினார். வடக்கு, கிழக்கில் இன, மத, கட்சி பேதங்களைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து வீடமைப்புத் திட்டம் 2016 முதல் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...
வரவு - செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 700 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று...
ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச்  சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர். ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து இவ் ஆமை குஞ்சுகளை  பிடித்துள்ள அந்நபர், அவற்றை சாரமொன்றில் சுற்றி உரப்பைக்குள் போட்டவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இவர், ஆமைக்குஞ்சுகளை பிடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு...
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரி - அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் 16.12.2015 அன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 06 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.   வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.   எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. பெருமளவிலான வீட்டுபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப்...
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில்  16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் இறம்பொடை பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த சிறுவர்கள் இருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர். மேற்படி நால்வரும் முச்சக்கரவண்டியில் மாவனெல்லையிலிருந்து...
2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை காரணம்காட்டி 16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் நுவரெலியா நகர மத்தியில் பால் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். பால்மாவின் விலை அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டதன் பின் கால்நடை வளர்ப்பாளர்களின் ஊடாக சேகரிக்கப்படும் பால்களை உரிய கம்பனிகள் நிராகரிப்பதன் காரணமாக பண்ணையாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து 16.12.2015 அன்று 700ற்கும் மேற்பட்ட நுவரெலியா மாவட்டத்திலுள்ள பால் பண்ணையாளர்கள் நுவரெலியா நகரில்...