ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தொழில் மத்திய நிலையம் அரசடி நூலகக் கட்டடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான தூதுவர் டேவிட் டலி இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தார். மாவட்டத்தில் தொழிலை எதிர்பாக்கும் இளைஞர் யுவதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், மாவட்ட செயலகத்திற்கும் வேலை வாய்புபுகள் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது....
நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கஜமுகசங்காரம் இம்பெற்றது. வழமைபோன்று தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து பிள்ளையார், குதிரை, அன்னம், பசு, கரடி, மான், புலி, குரங்கு போன்ற வேடங்களை அணிந்த இளைஞர்கள், சிறுவர்கள் பருத்தித்துறை வீதி - ஆடியபாதம் வீதி - கலைமகள் வீதி - விநாயகர் வீதி வழியாக சந்திரசேகரப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்து அங்கு...
இரணைமடுத் திட்டமே யாழ்.மாவட்ட குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! – அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
Thinappuyal -
"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். மேற்படி மக்களுக்கு கடல்நீரைச் சுத்திகரித்து குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றபோதும்,...
சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைந்துள்ள செயற்கை உர நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெறுகின்ற சிறுநீரக மாநாட்டிற்கு செயற்கை உர உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கை தவறானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், சிறுநீரக நோய்க்கு எதிராக குரல் எழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த மாநாட்டிற்கு...
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய கற்கை நிறுவனம் தெரிவிக்கின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டே முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தில் இறுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அடுத்த வருடம் முதல் புதிய பாடத்திட்டம்ட நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, 7 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும்...
சிறையதிகாரி மற்றும் சிறைக்காவலர் ஆகியோருக்கு இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கைதிகளை ஒரு சிறையில் இருந்து மாற்று சிறைக்கு மாற்றியபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இரவு 7.30 அளவில் சம்பவம் இடம்பெற்றவுடன் பொரளை பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் குழு ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் சம்பவத்தின்போது சிறைச்சாலையின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையதிகாரி மற்றும் சிறைக்காவலர் விளக்கமறியலில்
கொழும்பு மெகசின்...
ஜனநாயகத்திற்குப் புத்துயுர் அளிப்பதற்கு மக்களுக்குப் பலம் உள்ளது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் எனத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசர் தோமஸ் ஷனோன், இலங்கை சமாதானத்தை நோக்கிய மிகவும் கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை தனது அனுபவங்கள் ஊடாக உலகின் ஏனைய நாடுகளுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கவேண்டும். அமெரிக்கா வலுவான இலங்கையை எதிர்பார்க்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில்...
வடமாகாணசபையினால் திரட்டப்படும் வெள்ளநிவாரண நிதியை பெற்றுக்கொள்ளும் நிலையில் துணைத்தூதரகம் இல்லை
Thinappuyal -
சென்னை மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு என இலங்கையின் வடமாகாணசபையினால் திரட்டப்படும் நிதியை பெற்றுக்கொள்ளும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைதூதரகம் இல்லையென துணைதூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மழைவெள்ள பாதிப்புகளிற்காக மத்திய அரசாங்கம் எந்தவித சர்வதேச உதவியையும் கோராததாலேயே இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்கு நிவாரண உதவிகளை வழங்கவிரும்பும் எவரும் நம்பகதன்மை மிக்க அரசசார்பற்ற நிறுவனம் ஊடாக அவற்றை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள இலங்கை...
முதலமைச்சரின் அமைச்சானது வீடமைப்பு நிர்மாணம் மற்றும் சுற்றுலாத்துறையையும், உள்ள 10ராட்சித்திணைக்களம், தொழிற்றுறைத்திணைக்களம், மாகாணக்காணி ஆணையாளர் திணைக்களத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்காக 2016 ம் ஆண்டிற்கு ரூபா 2,357.191 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 2,038.691 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும ; ரூபா 318.5 மில்லியன் மூலதனச்செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அமைச்சிற்கு 2016 ம் ஆண்டிற்கு ரூபா 57.491 மில்லியன் மீண்டெழும் செலவினத்திற்காகவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 8 மில்லியனும்,...
'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்கள் தந்தையின் சொத்து கிடையாது' என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம், ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.கட்சி தொடர்பில் தமக்கு விரும்பிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி நேசிப்பர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதாகவும் எதிரானவர்கள் ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்...