ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச் சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர்.
Thinappuyal News -0
ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச் சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர்.
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து இவ் ஆமை குஞ்சுகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை சாரமொன்றில் சுற்றி உரப்பைக்குள் போட்டவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இவர், ஆமைக்குஞ்சுகளை பிடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார்...
ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க 34 நாடுகள் இணைந்த சூப்பர் ராணுவத்திற்கு இங்கிலாந்து உதவி
Thinappuyal News -
தீவிரவாதத்துக்கு எதிராக சவுதி அரேபியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.அதேபோல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையில் இணைந்து சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது.
தீவிரவாதத்தை எதிர்த்து போராட சவுதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் மக்களை...
வட கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற நிலையில் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களை கைக்குள் போட்டுக்கொள்வதன் ஊடாக மக்களிடம் உள்ள உரிமை மற்றும் சுயமரியாதை குறித்த வீரியத்தை குறைக்கும் ஒரு சதிவேலையாகவே கிராம இராஜ்யம் திட்டத்தை நாங்கள் பார்க்கிறோம் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்னேஸ்வரன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் உள்ள சகல கிராமங்களையும் நேரடியாக தமது கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதன்...
டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று தசாப்த காலங்களாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1986ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுகின்றது.
தேவானந்தாவை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படாமலேயே வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னை சூளைமேட்டில்...
கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒர் திட்டமாக அரசாங்கம் கிராம ராஜ்ஜிய முறைமையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராம இராச்சிய திட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுவிழக்கக்கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 13ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையிலேயே இந்த புதிய நடைமுறை அமையும் என அவர்...
அரச வங்கிகளை கட்டுப்படுத்தும் யோசனைகள் நீக்கப்பட வேண்டுமென தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க, தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குத்தகை வர்த்தகம் வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் n;தாடர்பிலான யோசனைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென லால்காந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்...
இலங்கை அகதிகள், இந்தியாவிலிருந்து கூடுதலான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணப் பொதிகளுக்கான எடையையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கட்டணம் இன்றி 20 கிலோ கிராம் எடையுடைய பயணப் பொதிகளை எடுத்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இந்த இந்த எடை 60 கிலோ...
ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார அவன்ட் கார்ட் தொடர்பில் விவாதம் நடாத்துவதிலிருந்து விலகிக்கொண்டார்
Thinappuyal -
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவன்ட் கார்ட் தொடர்பில் விவாதம் நடத்துவதிலிருந்து விலகிக்கொண்டார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் பகிரங்க விவாதம் நடாத்த தாம், அனுரகுமார திஸாநாயக்கவை அழைத்ததாகவும் அதிலிருந்து அனுரகுமார தப்பித்துக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் ஆகியோரிடம் கூறி இந்த விவாதத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார் என...
தமிழீழ விடுதலைப் புலிகளே வடக்கில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் பாரியளவில் சொத்துக்கள அழிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் படையினரால் வடக்கு வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் மக்களையும்...
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1989ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு சாட்சியம் வழங்கப்பட்டது.
கடையை கொளுத்திவிட்டு தன்னுடைய இரு பிள்ளைகளையும் இந்திய இராணுவம் கடத்திச் சென்றதாகவும் அன்று முதல் தனது பிள்ளைகள் இருவரும் காணாமல் போனதாகவும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த...