வணக்கம் இங்கே ஒரு தவறான கருத்தை ஒருசில ஈழத்தில் இருந்து வரும் அரசியல்வாதிகள் பதிய முற்ப்படுகின்றனர் அதாவது இவரை இனத்துரோகி என்று ஒரு தமிழ் குடிமகன் கூறியபோது இவர் கூறிய பதில் அதை மக்கள் சொல்லட்டும் என்று இதை சற்று தெளிவாக்க நான் விரும்புகின்றேன் தம்பி சுமந்திரன் உங்களின் கருத்தின்படி தமிழ் சமுகத்தில் இருந்து யாராவது கேள்வி எழுப்பினாலோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தாலோ சிங்களத்தின் பாணியிலே இவர்கள் புலிகள் என்பதுபோல் பொருள்படுகின்றது தம்பி...
சினிமா ரசிகர்கள் அனைவரும் பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது நாளை வெளியாகவிருக்கும் வேதாளம் திரைப்படத்தை தான். இத்திரைப்படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலிற்கு வருவதாக ஒரு செய்தி ஒன்று வதந்தியாக பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதில் தெரியவில்லை. இத்திரைப்படம் நாளை திரையில் வெளியான பின்னரே உண்மை என்ன்வென்று தெரிய வரும். அது வரை பொறுத்திருப்போம்
ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி திரைக்கு வர தயாராக உள்ள படம் இஞ்சி இடுப்பழகி. இந்த படத்தில் ஆர்யா ஒரு ஸ்லிம்மான பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் இவருக்கு அவ்வாறு நடக்காமல் போக அதனால் அதிர்ச்சியடைகிறார் ஆர்யா. இதனால் அழகான பெண்களை நினைத்து ஒரு பாடல் வருகிறது. அந்த பாடல் காட்சிக்காக ஆர்யாவுடன் முன்பு நடித்த கதாநாயகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமன்னா, காஜல், ஹன்சிகா என அனைவரும்...
அஜித் மற்றும் சிவா இணைப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் வேதாளம். இப்படத்தை பார்க்க பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்களும், பிரபலங்களும் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வேதாளம் குழுவினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் படத்தை பார்க்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏதாவது ஒரு சிறப்பான தினத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சேட் செய்வது பிரபலங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் சேட் செய்துள்ளார் தனுஷ். ரசிகர்களின் சில சுவாரஸ்ய கேள்விகளுக்கு தனுஷ் தெறி பதில் கொடுத்துள்ளார்.
சிறையில் கண்ணீருடன் தங்கள் வாழக்கையை கழித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் வலுவடைந்து வருகின்றன. இந்தநிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நாளை காலை 8 மணி தொடக்கம் மாலைவரை அடையாள உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மனிதாபிமானம் உள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி தொடக்கம் 2 மணிவரை தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஒத்திவைத்து...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக அதன் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை...
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மறைமாவட்டத்தின் குரு முதல்வராக பணியாற்றிய அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் புதிய ஆயராக நியமிக்கப்பட்டதையடுத்து, யாழ் மறைமாவட்டத்தின் குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார், யாழ் ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய குரு முதல்வரான அருட்தந்தை கலாநிதி ப....
யாழ்.குடாநாட்டின் நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர், சிவில் உடையணிந்த பொலிஸாரினால் மதுபான விற்பனை கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், சந்தேகத்திற்கிடமாக நடமாடுபவர்கள், மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், தொடர்பாக மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கலாம். அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தினை அடுத்து யாழ்.நகரில்...
யாழ்.நல்லூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடாநாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் உட்பட 10 இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் மேலும் தகவல் தருகையில், யாழ்.நகர் பகுதியை அண்மித்ததாக உள்ள இடங்களில் சிலர் இலட்சக்கணக்கான பணத்தினை பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து,  குறித்த பகுதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் நல்லூர் பகுதியில்...