மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றிலும் தொலைக்காட்சியிலும் காண்பதனைக் கொண்டு மக்கள் பிழையான கருதுகோள்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வரையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியும் என எவரும் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தை பாதுகாத்தால் மட்டுமே, மக்களுக்கு சேவைகளை வழங்க முடியும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுத்து வருக்கின்றார். உண்மையை நிலைமையை எடுத்துரைத்த காரணத்தினால் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பான முன்னாள் அமைச்சர் மாரப்பன, நேர்மை காரணமாக உண்மை சொன்னதாகவும் அதனால் பதவியை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனச்சாட்சிக்கு விரோதமின்றி மாரப்பன அவன்ட் கார்ட் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன மிக நேர்மையான...
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் குற்றம் சுமத்தி தாருஸ்மன் அறிக்கை மற்றும் அனைத்து விதமான விசாரணைகளும் பரிந்துரைகளும் சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்து. தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகரவினால் இந்த மனு தாக்கல்...
இறைமகன் இயேசுவின் நாசரேத்து பிரகடனத்தில் (லூக்கா 4:18 – 19) ‘சிறைப்பட்டோருக்கு விடுதலை’ முக்கியமான ஒரு கூறு. சிறையிலிருப்போரை மனிதத்துடன் நோக்கும் மனப்பான்மை நல்லோருக்கு அடையாளம் (மத்தேயு 25:36,43). நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நவம்பர் 08 முதல் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுபட்டு வருகின்றனர். நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு விடுதலையும் வழங்கப்படவில்லை, இவர்களின் விடுதலை தொடர்பான பொருத்தமான...
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகியமை ஏனைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்னவொரு காரணத்திற்காக எந்தவொரு சூழ்நிலைக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில் பாராளுமன்றில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமா செய்த் தீர்மானித்தார்...
    பழையவாடி பிரதான வீதி புளியங்குளத்திலிருந்து 5கி.மீ தூரம் வரை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.இவ் வீதியானது மழைக்காலத்தில் சிறிய வாகனத்தில் இருந்து பெரிய வாகனம் வரை செல்ல முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக காணப்படுவதால் இவ் வீதி வழியாக மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் இடையூரை சந்தித்து வருகின்றனர். இவ் வீதியினை புனர்நிர்மானம் செய்து தரும்படி பல தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரச திணைக்களத்தினாலோ நிறுவனத்தினாலோ இவ் வீதியினை புனர் நிர்மானம் செய்யாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....
இரண்டாம் விசேட இணைப்பு ---- இவ் ஹர்த்தாலை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பாரிய அளவில் நடாத்த கட்சித் தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளதால் எதிர்வரும் 11-11-2015 அன்று இடம்பெறவிருந்த ஹர்த்தால், நாள் மாற்றம் செய்யப்பட்டு 13-11-2015 வெள்ளிக்கிழமை நடைபெறும் என்பதனையும் தெரிவித்துள்ளார் வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்... இரண்டாம் விசேட இணைப்பு ---- இவ் ஹர்த்தாலை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பாரிய அளவில் நடாத்த...
    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையைப் பயன்படுத்தி இதய வீணை ஒலிபரப்புச் சேவையை நடத்தியமைக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் எனப் பெரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் இன்று வியாழக்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்துக்குச் சென்று இந்த...
தமிழரின் போராட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் புலிகளின் தலைவரின் இலக்கு என்னவாக இருந்தது...? அதைத் தமிழர்கள் சரிவரச் செய்கிறார்களா...? இன்றைய சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா.... போராட்டம் பயணிக்கும் பாதை சரியா..? கனடிய தேர்தல் தமிழர்களுக்கு கூறிய செய்தி என்ன..?  போன்ற வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் கனடாவில் வசித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.