2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் கணித பிரிவில் தரம் 07ஐச் சேர்ந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான துரைராசசிங்கம் இமயவன் என்பவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் பெற்று இலங்கைக்கும், மட்டக்களப்பு...
காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், மற்றும் காணாமற் போனோர் தொடர்பாக  ஆராயும் ஐ. நாவின் செயற்குழு இன்று இலங்கைக்கு வருகை தர இருக்கின்றது. இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தச் செயற்குழுவினர், கொழும்பில் தமது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலே,  ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு  இன்று ...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 30 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் சிறைக் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எவ்வாறாயினும், கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து உண்ணாவிரத போராட்டம்...
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த முகாமில் உள்ள புகலிடம் கோருவோர் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கன்றன. எனவே முகாமின் பாதுகாப்பு காவலாளிகள் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்றும் SBS தமிழ் செய்தி தெரிவிக்கிறது. புகலிடம் கோரும் பலரும் மேலும் அச்சம் கொண்டிருப்பதாக இந்த முகாமை பார்வையிட்ட...
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பி. அங்குள்ள வானொலியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளேன். எந்தவொரு அரசியல் கட்சியிலும் இவ்வாறான செயற்பாடுகளை...
மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் குறித்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் பொலிஸார் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் இன்றும் நாளையும் தங்களிடமுள்ள தகவல்களை வழங்க...
  ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் "லக்கலை" பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும்...
  < சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன் Posted by Sydney Kanthan on Saturday, November 7, 2015
  தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த கைதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இதன்போது, ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் அரசியல் கைதிகள்...
  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாண சபையை நிர்வகின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருந்தது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்கு சார்பாகச் செயற்பாடமையே எமக்கும்...