ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Thinappuyal News -0
ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைவதாக குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வன்னிமாவட்டத்தில் எதிர்வரும் வெள்ளி அன்று ஹர்த்தாள் அனுஸ்டிக்க த.ம.கூட்டமைப்பு தீர்மானம்
Thinappuyal News -
//
thinappuyal newsஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வன்னிமாவட்டத்தில் எதிர்வரும் வெள்ளி அன்று ஹர்த்தாள் அனுஸ்டிக்க த.ம.கூட்டமைப்பு தீர்மானம்
விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார்...
கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்: மீனவர்களின் வாயில் மீன்களை தினித்து சித்தவதை இலங்கை கடற்படை அட்டுலீயம்
ராமநாதபுரம் நவ 03,
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்றுக் காலை ராமேஸ்வரம்; துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில்; மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள்...
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
Thinappuyal -
செய்திப்பிரிவு.
07.11.2015.
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில்
வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
புலமைப்பரீட்சையில் சசிவரதன் திருசிகா161 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
சிவலிங்கம் சிவானுஷா 154 புள்ளிகளைப்பெற்று இப்பாடசாலைக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் இப்பாடசாலையின் 15 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேல்
பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர் என நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர்
செ.பவேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு.
ந.கலைச்செல்வன்.
மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! - கலைஞர் கருணாநிதி குதூகளிக்கிறார்.
யாழ்.வலம்புரி ஆசிரியரிடம் செமயாக மொக்கை வாங்கும் மாவை.சேனாதிராசா
இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் அண்மையில் சூளுரைத்திருந்தார்.
சிங்கள தேசம் என்று நீங்கள் கூறினால் நாங்கள் தமிழீழம் அமைப்போம் என்று மாவை கூறியிருப்பது குறித்து ஒரு பொதுவான அபிப்பிராயத்தை...
நவம்பர் 7 க்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கடிதம்.
Thinappuyal -
அரசியல் கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள்,
அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல்...
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரத்னத்தை 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கைது செய்வதற்கு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவசியம் இருந்ததாகவும், அதற்காக தன்னிடம் தகவல் வழங்கியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு, முன்னிலை சோசலிசக் கட்சியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அநுர குமார , கோத்தபாய ராஜபக்ச...
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் இந்த நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை நிழல் அமைச்சரவையின் ஊடாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றின் 8ம் இலக்க அறையில் கூடிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிழல் அமைச்சரவை அமைப்பது குறித்து தீர்மானித்துள்ளனர்.
மக்களுக்கான எதிர்க்கட்சி என்ற பெயரில் எதிர்காலத்தில் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தனவும், இந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது
எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70ம் பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்சவின்...
இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை பெற்றுக் கொடுத்து அது புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் உள்ளக பொறிமுறை இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படுமென்றும் அறிவித்தது.
பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு...