நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேஸில் அரசாங்கத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் தூதுவருக்கான அறிமுக ஆவணத்தை பிரேஸில் ஜனாதிபதி டிலிமா ரவ்சொப்பிடம் ஒப்படைத்தார். ஜகத் ஜயசூரியவுடன் மேலும் 21 தூதுவர்கள் அறிமுக ஆவணங்களை ஜனாதிபதி ரவ்சொப்பிடம் ஒப்படைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் வாழ்த்துக்களையும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பிரேஸில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியூயோர்க் விஜயத்திற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் நியூயோர்க் விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்திற்கான செலவுகளை ஈடு செய்ய பாராளுமன்றின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அரசாங்க முகவர் நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 1.3 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செலவுகளுக்காக 18 மில்லியன்...
நாட்டில் ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக இணைந்து தீர்வு வழங்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை சுயாதீன ஆணைக்குழுவாக உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினையும் சுயாதீனமாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் புதிய...
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்து பாரட்டுக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து அமைச்சரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை கடிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன கௌரவமான சட்டத்தரணி எனவும் அவரது நிலைப்பாட்டை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2002ம் அண்டு மிலேனியம் சிட்டி சம்பவத்தைப் போன்று காவல்துறையினர் தங்களது புகழை...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக முக்கியமான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் படவுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமன்றி முதலீட்த்துறை தொடர்பிலும் இந்த உடன்படிக்கையின் ஊடாக கவனம்செலுத்தப்பட உள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல...
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு எதிராக ஜே.வி.பி கட்சி எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது. ஜே.வி.பி.யின் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் பிழையான தகவல்களை பாராளுமன்றில் வழங்கியதாக திலக் மாரப்பன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம்...
மதுபான போத்தல்களில் விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளில் விசேட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கலால் திணைக்களத்தின் கண்காணிப்பிற்கு அமைய இந்த இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. அதேபோன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு போத்தல் மதுபானத்திற்கும் விசேட ஸ்டிக்கர் ஒட்டப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மதுபானங்களுக்கு பாரியளவில் வரி விதித்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபானங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத...
பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர்...
அவன்ட் கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று அமைச்சர்களையும் பதவிநீக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அலரிமாளிகையில் நேற்று  கடும் அமளிதுளியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அமைச்சர்கள் திலக்மாரப்பன, விஜயதாச ராஜபக்ச மற்றும்உள்துறை அமைச்சர் வஜிரஅபயவர்த்தன ஆகியோரை பதவிநீக்குமாறு பல அமைச்சர்கள் பிரதமரை கோரியுள்ளனர். மூன்று அமைச்சர்களிற்கும் காட்டப்பட்ட எதிர்ப்பு காரணமாக பிரதமர்...
அவன்ட் கார்ட் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத கப்பல் தொடர்பில் இவ்வாறு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்துக்கு, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்ன போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி,...