பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாஜூடீனின் சடலத்தின் சில பாகங்களைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வசீம் தாஜூடீனின் சடலம் அண்மையில் மீள தோண்டி எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது இந்த உடல் பாகங்கள் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மரணம் பற்றிய உண்மையான விபரங்கள் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு உடல் பாகங்கள் காணாமல் போகச்...
புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபை அந்த இயக்கம் கட்டி எழுப்பியது. இயக்க இரகசியங்கள் உயிரை விட மேலானவைகளாக மதிக்கப்பட்டன. எதிரியிடம் சரணடைவதை விடவும் உயிரைத் துறப்பதே மேலானது, புனிதமானது என்று நம்பப்பட்டது.
இயக்க இரகசியங்களுக்காக...
பல்லினக் கலாசாரம் கொண்டதே இவ்வுலகமாகும். இவ்வுலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் சரித்திரங்களும், அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களின் பின்னணியாகும். இவ்வாறான பின்னணியே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள், தெய்வ நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடு ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் சிந்தனையோடும் ஒரு சமூக அமைப்பாக மக்கள் குழாம் சிறந்ததொரு நாட்டை உருவாக்கும் திறனை அடைந்துள்ளனர். இவ்வாறான...
உன்னைப் பற்றி எழுத
எத்தணிக்கும் போதெல்லாம்
மீட்கும் நினைவுதனை
எந்தன் பேனா
வீரம்கொண்டு எழுதிட வைக்க
நான் கவி எழுத
காகிதத்தாளில் என்விம்பம்
ஏளனம் செய்கிறது என்னைப் பார்த்து.
என் தோழியாய்
தன் சிரம் நனைத்து
என் சிரம் காத்து
கதிரவன் கண்ணொளியில்
என் முகம் படாமல்தடுத்து
நான்செல்லும் இடமெல்லாம்
தொடர்ந்து வருபாள் என்னுடன்.
பேச்சுக்களிலே ஒரு குடை
செயல்களிலே பல கிளை
அடிமைக்காற்று அறைந்து செல்ல
குற்றவாளியாகிறது என் கை
பொறுப்பிலிருந்து விடுபட
விடவில்லை உள்மனம்
உரிமை தேடுகின்றது.
தந்திரங்கள் தடம்பதித்து
கோளக் குவளயத்தில் சுற்றுகின்ற
அதிகாரத்தின் மறுமுகம் அது
வகை நிறையாய் பல வர்ணத்தில்
மனதினைத் தொட்டுச்செல்ல
மக்களும் அதனை நம்பிட
பொய்தோற்றக்காட்சிகள் எம் முன்னே.
ஒரு...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
பொன்சேகா நேற்று கூறிய தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
அவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ச லஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.
பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம்...
தெற்கு அதிவேக வீதியினூடாக 2296 கிலோ பாவனைக்குதவாத தேயிலையை கொண்டு சென்ற இளைஞர்கள் முறையும் லொறியையும் பொலிஸார நேற்று கைது செய்துள்ளனர்.
அதனைக் கொண்டு சென்றவர்கள் ஹெம்மாத்தகம,வெளிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இரு இளைஞர்களையும் தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக லொறி பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜீன்ஸ் அணிந்ததற்காக நபரொருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் ஒன்று முதுகல உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிரோசினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். குறித்த கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல் இடம் பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தின் போது அவர்களுடைய ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயோதிபம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரை பாளை ஐகிரவுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அருகில் இருந்து...
மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணனின் மீது காலணி தாக்குதலை நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு நாராயணனின் ஆலோசனையே காரணமாக இருந்தது என்று குற்றம் சுமத்தி அண்மையில்,
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து இலங்கையரான எம்.பிரபாகரன் என்பவர் அவர் மீது காலணி தாக்குதலை நடத்தினார்.
எனினும் இந்த சம்பவத்தை தாம் கண்டிப்பதாக தமிழகத்தின் அரசியல் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
மே 17...
ஈழத்து நவீன அரங்க வரலாற்றில் பலர் பற்றிப் பேசப்படினும் சில ஆளுமையாளர்கள் பெரிதும் அறியப்படாத இலைமறை காய்களாகவே உள்ளனர். இந்த வரிசையில் இளைய பத்மநாதன் அவர்கள் 'கந்தன்கருணை' நாடகம் மூலமாக சிறிதளவு பேசப்படினும் அதற்கு அப்பால் இவரது அரங்கச் செயற்பாடானது அறியப்படவில்லை. அண்மையில் இவருடனான நேரடியான கலந்துரையாடலின் போது இவரது புதிய அரங்கப் போக்குகள் பற்றிய பல தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.
மகாபாரதம்இ இராமாயணம் மற்றும் வரலாற்று சம்பவங்களின் பல...