முல்லைத்தீவு நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தமையை குளோபல் தமிழ் செய்திகள் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தமது மகிழ்சசியை குளோபல் தமிழ் செய்திகளுடன் பகிர்ந்து கொண்டனர். கடந்த நான்கு வருடங்களாக நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமல் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மக்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாகியிருந்தனர். தமது வைத்தியசேவையை நிவர்த்தி செய்ய...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சகல கிராமங்களையும் உள்ளடக்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்தும் யானைகளின் வேட்டைக்கு மட்டக்களப்பு மக்களின் சொத்துக்கள் இரையாகிவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக யானைத் தொல்லைகள் அதிகரித்துள்ளன. கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் வீடுகளையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்துவதுடன் உயிர்களையும் பலியெடுத்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த மின்சாரவேலி அமைத்தல், மற்றும் யானை வெடிகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மாவட்ட செயலக உலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்...
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்பட்டனர். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை நடிகை தமிதா அபேரட்னவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்
இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில்,  அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவரால் கைதிகளை விடுவிக்க முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது என அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள அவரது...
தான் பதவியிலிருக்கும் போது அந்த பதவிக்கு வேரொருவரை நியமித்துள்ளதாக டாக்டர் திலங்க சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறித்த தனக்கு முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் டாக்டர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு இன்று பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு...
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 11 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பீ.எவ்.மிரென்டா லங்காசிறி  சேவைக்கு  தெரிவித்தார். இந்த மீனவர்களின் படகுகளிலுள்ள ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவர்கள் திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடற்படையின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட...
எச்.என்.டி.ஏ. மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அறி்க்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி மத்துரட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று பிரசனமாகியுள்ளார். அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், இந்த தாக்குதல் நடாத்தப்படவில்லை என அவர் இதன்போது சாட்சியமளித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளில் ஈடுபட்டிருந்த உயர் பொலிஸ்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம். அத்தோடு எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு நடைப்பெற்ற ஒரு மணிநேர...
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள்  விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளது. பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவின் கடந்த அரசாங்க ஆட்சிக் காலங்களில் இந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி...