அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் அமைச்சரவையில் அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன அண்மையில் பாராளுமன்றில் விளக்கம் அளித்திருந்தார்.
காவல்துறையினர் தங்களது நற்பெயரைத் தேடிக்கொள்ள இவ்வாறு அவன்ட் கார்ட் மிதக்கும் கப்பல்...
பத்த இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையினர் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பத்துபேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குறித்த மீனவர்கள், இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான அதிவேக கண்காணிப்பு படகுகள் மீது மோதி சேதப்படுத்தியதாக கடற்படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள்,
உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர்,
உள்ளுராட்சி அமைச்சு,
இல 330, டொக்டர்.கொல்வின் ஆர்.சில்வா மாவத்தை
(யூனியன் பிளேஸ்)
கொழும்பு 02
உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்
மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கரிசனைக்காக தயவுடன்; முன்வைக்கின்றேன்.
முறைகேடாக நடைபெற்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் குழுவொன்றை நியமித்தமைக்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
மேற்படி எல்லை மீள்நிர்ணயம்...
வடமாகாணசபையின் 37வது அமர்வு இன்றைய தினம் பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
Thinappuyal News -
வடமாகாணசபையின் 37வது அமர்வு இன்றைய தினம் பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்றைய அமர்வில் 10 பிரேரணைகளும், 2 வாய்மொழி மூல கேள்விகளும் கேட்கப்பட்டு 10 பிரேரணைகளில் 9 பிரேரணைகள் சபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாகாணசபையின் 37வது அமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5...
வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார்
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள்
இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று 04-11-2015 காலை
பொலிசார் மயானத்தில் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து வவுனியா மற்றும் மானிப்பாய்
பொலிசார் இணைந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்த பகுதிகளில்
பக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகித்த
இடங்களை...
"போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்றபோதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்கமுடியும்." - இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடிச் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இறுதிப் போரின் இறுதி ஆறு நாட்கள் காலப்பகுதியில் வெளிநாட்டில்...
புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அரசியல் கைதிகள் எதிர்ப்பு! பொதுமன்னிப்பே வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை
Thinappuyal -
தங்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சிலர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் 20 பேர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். இதன்படி, இரண்டு கைதிகள் மட்டுமே புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஏனைய...
தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சிரா பத்தும் மாளிகையில் அந்நாட்டின் இளவரசி சக்ரி சிரிண்டோவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியை வரவேற்ற இளவரசி சிரிண்டோன், தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பங்களில் இலங்கை சிறந்த விருந்தோம்பலைக்கொண்ட ஒரு நாடு என்பதை கண்டுகொண்டதாகத் தெரிவித்தார். தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இங்கு வருகை தந்தபோது...
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை கைதுசெய்யாமை குறித்து, பொலிஸ் நிதிமோசடி பிரிவு இன்று மன்னிப்புக் கோரியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ரூபா 60 கோடி பெறுமதியான 'சில்' துணிகளை வழங்கியமை தொடர்பாக லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜரான பொலிஸ்...
வட மாகாண அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் JICA நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் SLIDA நிறுவனத்தின் அனுசரணையுடனும் நடாத்தப்படும் அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி வடக்கு , கிழக்கு , வடமத்திய மாகாணங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
பத்து நாட்களை கொண்ட ஒவ்வொரு பயிற்சி அமர்வும் ஐந்து...