முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள  ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ஈழத்தமிழர்...
ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். "எவன்கார்ட்" விவகாரத்தைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற எவன்கார்ட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு...
அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற...
ஊழல் மோசடிக் குற்றங்களைப் புரிந்த மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட தனிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். போரை நெறியாண்டமை, உத்திகளை மேற்கொண்டமைக்கான பொறுப்பை ஏற்பதாக தெரிவித்த அவர் போரின்போது எவரேனும் மனித உரிமை...
s இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இராணுவத்தாலும் அரசாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்தும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   மன்னார் மாவட்டத்தில் சுமார் நாலாயிரம் ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் சன்னார் பிரதேசத்தில் இந்த சுவீகரிப்பு முயற்சி இடம்பெற்று வருகிறது. குறித்த பகுதிகளுக்குள் மக்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அன்றாட...
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் இலங்கையில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறானவர்கள் நாடு கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னிலை சோசலிச கட்கியின்...
முல்லலைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மீனவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தனர்.   இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபடுவதே சட்ட விரோதமானது என்று விபரித்துள்ள பிரதேச மீனவர் அமைப்பு பிரதிநிதி ஒருவர் அந்த இராணுவத்தினர் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் கூறினார்.   தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை தமது பாரம்பிய கடலில் பயன்படுத்துவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இதனால்...
நிதிக்குற்றவியல் விசரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு 2 இன் பொறுப்பதிகாரியே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்ற மரபுகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஸ பெல்பிட்ட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யாது நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தியதாக...
யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குணரத்தினம் சஞ்சீவினி(15) என்ற பாடசாலை மாணவி காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்தனர். இந் நிலையில் குறித்த சிறுமி தொடர்பான, புகைப்படம் மற்றும் தகவல்களை இலங்கை முழுவதும் உள்ள பொலிஸாருக்கு கொடிகாமம்...
வடக்கின் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகின்றாரோ அதேபோன்று தெற்கின் பிரச்சினைகளையும் நோக்கும் இலங்கையின் உண்மையான தேசியத் தலைவர் இரா. சம்பந்தன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் புகழாரம் சூட்டியுள்ளார். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக பொலிஸாரால் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரான இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட வினாவை எழுப்பியிருந்தார். இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில்...