குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் தொடர்பாக இந்த உத்தரவு...
இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார். அவர், 76 வயதில் இன்று காலை காலமானார். ஈ.ஏ.பீ. குழும நிறுவனத்தின் தலைவரான சோமா எதிரிசிங்க இலங்கையின் முதனிலை பெண் தொழிலபதிர் மற்றும் வர்த்தகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1974ம் ஆண்டு ஈ.ஏ.பி. எதிரிசிங்க திடீரென உயிரிழந்தனைத் தொடர்ந்து அவர் சோமா எதிரிசிங்க வர்த்தக நடவடிக்கைகளை பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி, வானொலி, நகை அடகுபிடித்தல், தங்க ஆபரண விற்பனை, வாகன...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியன் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்பலந்தொட்டை ரீதிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் இன்ற தனித்து போட்டியிட்டால், சுதந்திரக் கட்சி படுதோல்வி  அடையும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடக் கூடாது...
கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றிலிருந்து 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர்கல்வியமைச்சர் சந்தேகநபரா என்பதை  ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்,18 ம் திகதிக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அவர் கோரியுள்ளார், கொழும்பு 7 இல் உள்ள குறிப்பிட்ட வீடு சிவா சின்னத்தம்பி என்பவரிற்கு சொந்தமானது. பின்னர் அது கொழும்பு பல்கலைககழகத்திற்கு வழங்கப்பட்டது. குறிப்பி;ட்ட வீட்டின் சாவிகள்...
ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, ஒரு தொகுதி ஆயுதங்கள், நேற்று புதன்கிழமை அழிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சான்றாதாரங்கள் என்பதுடன் நிறைவடைந்த வழக்குகளுக்குரிய ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த ஆயுதங்கள் அழிக்கப்படவிருந்தன. எனினும், அவ்வாறு அழிக்கவேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவற்றை ஆழ்கடலில் கொட்டுவதற்கு, கடற்படையினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்வத்தை அரசாங்கம் மெய்யாகவே கண்டித்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்கள் வலுவாக காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக...
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சட்;டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எவரும் நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக புகலிடம் கோரும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதப் படகுப் பயணம் குறித்த அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் எவ்வித...
மடக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வாழைச்சேனை விவசாய திணைக்களத்திற்கு உட்பட்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வாகனேரி பிரதேசத்தில் பெரும் போக நெற் செய்கைக்கென விதைக்கப்பட்ட பெருமளவு வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன், விதைப்பிற்கென தயார் நிலையிலிருந்த நிலங்களும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வாய்க்கால்கள் திடீரென உடைப்பெடுத்தமையால்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக இணைந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனியான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சிகள் இதற்கு...
15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை - ஆராச்சிகந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கான்ஸ்டபிலான இவர் 15 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதோடு, அதில் 10 இலட்சத்தை பெற்றுக் கொள்ள...