முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார்.
எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியில் இன்றைய தினம் அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறற்றன.
"தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற்...
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்:
Thinappuyal -
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் காலணியால் தாக்கப்பட்டு உள்ளார்..
இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் தனது காலணியை கையில் எடுத்து தாக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
அந்த...
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை.
Thinappuyal News -
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை. - இவ்வாறு கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை...
நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.
Thinappuyal News -
நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது பொறுப்பற்ற விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பின்நோக்கி நகர்ந்த மாணவர்கள்மீது எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது? எனவே, இந்த சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர்...
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
Thinappuyal News -
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
thinappuyal news
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
Posted by Thinappuyalnews on Monday, November 2, 2015
<div id="fb-root"></div><script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s); if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js,...
மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கொழும்பில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்திய போது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை இதுவரையில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கம் காலத்தை கடத்த விசாரணைக் குழுக்களை நிறுவியுள்ளதாகவும்...
பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டமை குறித்து விளக்கம் கோரியுள்ளார் சபாநாயகர்
Thinappuyal -
பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விளக்கம் கோரியுள்ளார்.நேற்றைய தினம் பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு தொகுதி மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு மேலதிக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக பதில் காவல்துறை...
காவல்துறை மா அதிபரிடம் 10 மில்லியன் நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனு:-
Thinappuyal -
காவல்துறை மா அதிபர் மற்றும் கொட்டாதெனிய காவல் நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொட்டாதெனிய சேயா என்ற நான்கரை வயது சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 17 வயதான மாணவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறை மா அதிபர் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேயா...
புதிய அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் டீல்காரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ள காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ கைது செய்யப்படுவது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியாது எனவும், அவ்வாறு தெரிந்திருந்தால் பெசில் கைது செய்யப்பட்டிருக்கப்பட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சம்பவங்கள்...
மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவின் சட்ட மா அதிபர் மொஹமட் அனில் இதனை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் இவ்வாறு அவசரகால நிலைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும்...