ஆறு வயதுடைய தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண்ணினால் தனது பிள்ளையை ரயிலில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அவ்விடத்தில் இருந்த கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பிள்ளையை காப்பாற்றியுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தப்பி சென்றுள்ள நிலையில் கண்டி பொலிஸார்...
மனைவியை மீட்டுத் தாருங்கள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்திருக்கும் கணவன்
Thinappuyal -
மத்தியகிழக்கில் தொழில் புரியும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரும் படி கூறி நபரொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான வாயிலின் முன் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை தெஹிஹத்தகண்டியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்துள்ளார்.
தனக்கு தெரியாமல் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக தனது மனைவி வெளிநாட்டுக்கு பயணித்துள்ளதாகவும், தற்போது அழைப்பை மேற்கொண்டு தன்னை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர...
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணத்தில் இருந்த 50 மில்லியன் பணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பண தொகையினை லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியினால் பரிசாக, குறித்த முக்கியஸ்தரின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்டு பணத்தில் 715 கோடிக்கு அதிகமான குறித்த வங்கி கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை முன்னோக்கி நடத்தி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பணம் தொடர்பில் விசாரணை...
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் சிகிச்சைகளுக்கான அனைத்து செலவீனத்தையம் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடாத்திய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித்த தேரருக்கு மேலதிக சிகிச்சைகளை சிங்கப்பூரில் வழங்குமாறு ஜனாதிபதி...
இலங்கையின் அகதி ஒருவர் தொடர்பில் நடைமுறை நேர்மை மீறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த இலங்கையரின் அகதிக்கோரிக்கை மனு மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2010ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு சென்ற குறித்த இலங்கை அகதியின் ஒரு தடவை மாத்திரம் ஒலிவாக்குமூலம் பெறப்பட்டுள்ளது
எனினும் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெறப்படவில்லை. இது நடைமுறை நேர்மைக்கு மாறான செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்னம், கேகாலை அங்குருவெல்ல பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு லங்காசிறி இணையத்தளத்திற்கு தெரிவித்தது.
குமார் குணரத்னம், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
தற்போது அவர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள...
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் இன்று காலை 9 மணியளவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.
யுத்தக் குற்ற நீதிமன்ற விசாரணைகளில் முஸ்லிம்களின் இழப்புக்களையும் பாரபட்சமின்றி உள்வாங்கும் பொருட்டு, விசாரணைக் காலத்தை 1985 வரைக்குமாகப் பின்னகர்த்தல், கிடப்பில் போடப்படும் வட மாகாணா முஸ்லிகளின் மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும்...
வடமாகாண விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மறுவயற் பயிர்ச்செய்கைகைய ஊக்குவிக்கும் வகையிலும் மறுவயற்பயிர் விதைகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மீள்குடியேறிய விவசாயிகளில் இருந்து 615 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியில் உழுந்து, பயறு, நிலக்கடலை ஆகியவற்றின் விதைகள் அடங்கிய பொதியோடு மண்வெட்டி, கத்தி...
மூதூர் கங்குவேலி கிராமசேவகர் பிரிவில் உள்ள படுகாடு மற்றும் முதலைமாடு ஆகிய பகுதிகளிலுள்ள தமது 1500 ஏகார் வயற் காணிகளில் அத்துமீறிய வயற் செய்கையினை சிலர் மேற்கொள்வதனால் தமது காணிகளை திரும்பவும் பெற்றுத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் 11.30 மணிக்கு மூதூர் பிரதேச செயலக வாயிலை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த காணிகளில் தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்ததாகவும் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைகளின்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பாராளுமன்ற நுழைவாயில் பகுதிக்கு வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற ஒளிபதிவு ஊடகவியலாளர் ஒருவருக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த ஒளிபதிவு ஊடகவியலாளர் அரச தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அடையாள அட்டையை காண்பித்த போதிலும் அதனை பொருட்படுத்தாது, தனது கடமைகளுக்கு இடையூறு விளைத்ததாக குற்றஞ்சுமத்தி கைது செய்வதாக...