யான் படத்திற்கு பிறகு திருநாள், கவலை வேண்டாம், போக்கிரி ராஜா ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா, இப்போது இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தொடங்கவுள்ளார். இந்த படத்திற்கு 'ஜெமினி கணேசன்' என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் அவர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
கமல்ஹாசன், நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக நல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் இப்போது தடை செய்யப்பட்டுள்ள தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். காளைகள் வதை செய்யப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் செய்வது போல் ஜல்லிக்கட்டில் இங்கு காளைகளை கொல்வதில்லை. அதனால் இதை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர்...
விஷால், ராதாரவிக்கு இடையே இருந்த மோதல் எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த சண்டைகளை எல்லாம் மறந்து இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளார். ஏன் இந்த படத்தில் ராதாரவி நடிக்க சம்மதித்தார் என இயக்குனரே கூறியுள்ளார். அவர் கூறுகையில் ’கதையை தயார் செய்யும் போதே இந்த கதாபாத்திரத்திற்கு ராதாரவி தான் சரி என்று மனதில் பட்டது, அவரிடம் போய் இதை...
தல அஜித் நடிப்பில் வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கின்றது. இதனால், அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து காத்திருக்கிறதாம். வேறு ஒன்றும் இல்லை, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் அன்றைய தினம் வெளிவரும் என கூறப்படுகின்றது. இந்த தீபாவளி தலதளபதி ரசிகர்கள் இருவருக்கும் செம்ம விருந்து தான்.
இந்த தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளமும் , கமல் ஹசனின் தூங்கவனமும் ரிலீஸ் ஆகவுள்ளது . இந்நிலையில் வேதாளம் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்க்களிடைய பலத்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, டீசர் , பாடல்கள் போன்ற எல்லாவற்றிலும் இதுவரை தமிழ் படங்கள் செய்யாத சாதனைகள் செய்துள்ளது வேதாளம் . தற்போது வேதாளம் படம் உலகம் முழுவதும் உள்ள எல்லா நகரங்களிலும் வெளியாக தயாராகி வருகிறது .குறிப்பாக இது வரை தமிழ் படங்களே...
உலகிலுள்ள வல்லரசு நாடுகள் பொதுவாக தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நிலக்கீழ் பதுங்குகுழிகளை அமைப்பது என்பது வழமையானது. உலகில் பல பிரசித்திபெற்ற பதுங்கு குழிகள் இருக்கின்றன. அவை யாவன, எறும்பு பதுங்குகுழி, எலி பதுங்குகுழி, பாம்பு பதுங்குகுழி, சிலந்தி பதுங்குகுழி, மரம், கிணறு வடிவிலான பதுங்குகுழிகள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஒசாமா பின்லேடனின் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அரசினால அமைக்கப்பட்ட பதுங்கு குழியே எறும்பு ஆகும். இதனது கட்டுமானப்பணிகளை...
அண்மையில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்குச் சார்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே. இத்தீர்மானமானது உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிரானவொன்றே. தமிழ் மக்களின் பிரச்சினையை நீடிக்கச்செய்து அந்நீடிப்பில் இலங்கைத் தீவு முழுவதையுங் கபளீகரஞ் செய்யும் உலக வல்லாதிக்க சக்திகளின் கபட நோக்கத்தின் ஓர் அம்சமே இத் தீர்மானமாகும். இவ்வல்லாதிக்க சக்திகளில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை குறிப்பிடக்கூடிய தேசங்களாகும். எவ்வாறு இலத்தீன் அமெரிக்க நாடுகளிலொன்றான வியட்நாம் அமெரிக்காவின் அகோரமான பொருளா...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால் நான் கட்டாயம் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன் என்று ஷேவாக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் கடந்த 20ம் திகதி தனது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான பல விடயங்களை நினைவு கூர்ந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக் உச்சத்தில் இருக்கும் போது, 2006ம் ஆண்டிற்குப் பிறகு...
ந்திய நாட்டிற்காக விளையாடிய ஒரு வீரருக்கு வழியனுப்பு போட்டியில் (பேர்வெல் மேட்ச்) பங்கேற்க தகுதி இல்லையா? என சேவாக் மனக்கவலையுடன் கூறியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நினைவுகூர்ந்து வரும் சேவாக், கடந்த 2013 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் என்னை நீக்குவது குறித்து தேர்வாளர்கள் முன்னரே தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஓய்வு பெற்றிருப்பேன், 13 ஆண்டுகள் விளையாடிய...
தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உரு வாக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அரச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருப்பதானது தமிழ் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் அதேநேரம், தான் தமிழரசுக்கட்சி எனவும் தந்தை செல்வாவினுடைய வழிநடத்தலில் செயற்படுத்தப்பட்டேன் எனவும் அந்த செவ்வியில் தெரிவத்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள், அரசு தமிழ் மக்களை மீண்டும் அடக்கியாள நினைத்தால் அது பாரதூரமான...