மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியால் சிறியரக வாகனம் பயணம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த வீதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. எனினும் வெள்ள நீர் வரத்து குறைவடைந்தால் சிறியரக வாகனம் செல்லமுடியும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கட்டார் நாட்டின் செம்பிறை சங்கத்தின் திநி உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் 44 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு புதிய கடைத்தொகுதிகள் இரண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி கிராமத்தில் 70 வீடுகள்...
எல்பிடிய - ரன்தொடுவ பிரதேசத்தில் இன்று காலை 9.45 மணியளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை 3ம் திகதி வழங்குமாறு கோரிய போதிலும் தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதோடு இதனை எதிர்வரும் 5ம் திகதி வழங்க முடியும் என தெரிவித்தது.
பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா நகரத்தில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறி செய்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பருவகால பயிரான லீக்ஸ் பாரிய விலை வீழ்ச்சியினையும், பாதிப்பினையும் அடைந்துள்ளது. மரக்கறி செடிகளுக்கு உரம், கிருமி நாசினிகள் போன்றவற்றை தெளிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அத்துடன் மரக்கறிகளின் விலைகளிலும் பாரிய வீழ்ச்சி...
இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக மாநில முன்னாள் முதல் கலைஞர் கருணாநிதியின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில்...
இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு தடவையும் இரு நாடுகளினதும் கடற்படையினரும், கரையோரப்...
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட 25 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இது மிகவும் ஓர் பாரதூரமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனைத்து விசாரணகளையும் பூர்த்தி செய்து, அடுத்த...
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்படு செய்யப்பட்டுள்ளது. தேசிய காவல்துறைய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மர்மமான முறையில் ஒருவரின் மரணம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திரா நன்தனி பெரேரா என்பவரினால் சட்டத்தரணி துஸார ரணதுங்கவின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்திரா நன்தனி தெரிவித்துள்ளார். நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக நன்தனியின் கணவர் குமாரசிறி மதுரப்பெரும உயிரிழந்தார். மதுரப்பெரும, காவல்துறை ஊடகப்பேச்சாளரது...
வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரைண நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னயியில் யார் செயற்பட்டார்கள் என்பது பற்றிய விபரங்களை தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விசாரணைகளை நடத்தி உரிய முறையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது  அதிகாரிகளின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை...