ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் தந்தானானே தாரேனானா தானா ஏய் தந்தானானே தாரனானா தானா.... ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்.... கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும் ஆகாயத்தை நூலால் அளக்க... சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் வளர்த்த கோழி உரித்திடாத...
  யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான சிறைச்சாலை இன்றைய தினம் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சிறைச்சாலை கட்டிடத்தை அமைச்சர் இன்றைய தினம் மாலை 2.30 மணிக்கு திறந்து வைத்தார். புதிய சிறைச்சாலை வளாகம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் மருத்துவமனை, மற்றும் கைதிகளுக்குப் போதிய இடவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் நிலத்தில் 272 மில்லியன் ரூபா செலவில்...
ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவில் உள்ள ரஸ்ய தூதரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 224 பயணிகளுடன் பயணித்த ரஷ்ய வானுர்தி ஒன்று எகிப்து மத்திய சினாய் குடா பகுதியில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வானுர்தி மத்திய சினாய் குடாவின் எல்லையை கடந்ததன் பின்னர் வானுர்தியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், காணாமல் போனதாக கூறப்படும் வானுர்தி பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யாவை மேற்கோள் காட்டி சில...
  போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ஆம் நாள் நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போரின்...
  "இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.'' - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இன்று சனிக்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். "ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள்...
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பிக்குமார் மற்றும் மாணவியரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான காயங்களுக்குட்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எனினும் இச்சம்பவத்தின் போது சாதாரண காயங்களுக்குள்ளான ஆறு...
  முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது....
  ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.   பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் நேற்று மஹிந்த ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார். சட்டத்தரணிகளுடன் அவர் நேற்று முற்பகல் 10.00 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரியாலயத்திற்கு சென்றிருந்தார். எனினும், ஏழு மணித்தியாலங்கள் அங்கு காத்திருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதியப்படவில்லை என...
  கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி-...
  தமிழ் மக்களின் தலையெழுத்து வன்னி மண்ணில் மாறி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, கிராம மக்களின் பொருளாதார அபிவிருத்தி போன்றன நடைபெற வேண்டுமெனில் 1.வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப் பேற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.தவறின் 2.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வன்னி மண்ணில் அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அனைத்தும் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளினை மேற்கொள்ளவேண்டும். உப்புச் சப்பில்லாத...