ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.   பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் நேற்று மஹிந்த ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார். சட்டத்தரணிகளுடன் அவர் நேற்று முற்பகல் 10.00 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரியாலயத்திற்கு சென்றிருந்தார். எனினும், ஏழு மணித்தியாலங்கள் அங்கு காத்திருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதியப்படவில்லை என...
  கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி-...
  தமிழ் மக்களின் தலையெழுத்து வன்னி மண்ணில் மாறி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, கிராம மக்களின் பொருளாதார அபிவிருத்தி போன்றன நடைபெற வேண்டுமெனில் 1.வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப் பேற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.தவறின் 2.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வன்னி மண்ணில் அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அனைத்தும் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளினை மேற்கொள்ளவேண்டும். உப்புச் சப்பில்லாத...
  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான் - தொப்பிக்கல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புலிபாந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசங்களை அண்மித்த கிராமங்களுக்கான தரை வழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும்...
  இசைப்பிரியா தனது கையில் கடைசி வரை வைத்திருந்த பொருள் வெளியானது….! மீண்டும் சோகத்தில் குடும்பம் போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாகக் கூறி, அவரது வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே இயக்குனர் கணேசன் படமாக்கி வெளியிடத் துடிப்பதாக இசைப்பிரியாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்த பொழுது...
  மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களிடம் திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில்...
  ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று அடுத்த மாதத்தில் இலங்கை வரும்போது இந்த முன்னேற்ற அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச கடற்பரப்பில் இலங்கை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் இருந்து கடல் உணவுகளின் இறக்குமதிகளை தடைசெய்திருந்தது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள...
    விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு...
  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார். விளையாட்டுதுறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசத்தை அவரின் இல்லத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசத்தைச் சந்தித்து பல்வேறு விடயங்கள்...
    கிளிநொச்சியில் புகையிரத கோர விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி..!! கிளிநொச்சி 55ம் கட்டைப்பகுதியில் சற்றுமுன்னர் பிற்பகல் 6.45 மணியளவில் புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் சம்பவ இடத்தில் பலி. புகையிரத கடவையினால் குறித்த நபர் மோட்டார் சைக்கிள் உடன் கடவையை கடக்க முயன்ற வேளையே சம்ப்வம் நிகழ்ந்துள்ளது. பலியானவர் யார் என இனங்காணப்படவில்லை,குறிந்த நபர் அந்த பகுதி நபர் இல்லையென அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் அங்கு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு...