தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், வீராட் கோஹ்லி சதமடித்து கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் வீராட் கோஹ்லி 138 ஓட்டங்கள் எடுத்தார், இது அவரது 23வது சதமாகும்.
உலகளவில் சச்சின் 49 ஒருநாள் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக 22 சதங்களுடன் இருந்த கங்குலியின்...
டெஸ்ட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன், அவரது சாதனைகளை பரிசீலிக்கும் போது டோனியின்நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம்.
இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை தடுமாறுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டொஸ் வென்ற...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்வோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழக்காமல் இருக்க இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுவது அவசியம்.
அதுமட்டுமின்றி கடைசி போட்டியிலும் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி...
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 140 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 138 ஓட்டங்கள் எடுத்து...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என தபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்த அவர், தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும், சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய நீதிமன்ற முறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்தத்தை நோக்கி மக்கள் அழுத்தம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கட்சிகளிடம் கோரியுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு மாற்றுக் கருத்துக்கள், வித்தியாசமான யோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில்...
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும் – கலெம் மக்ரே
Thinappuyal -
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவிலயாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார்.
கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி இலங்கை அரசாங்கமும் ஆவணப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இனியும் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆவணப்படத்தை ஒளிபரப்புச் செய்வதனை...
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு பொதுப்படையான வழக்கு.
திருகோனமலை மாவட்டத்தில் திருகோனமலை நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தம்பலகாமத்திலும் மூதூர் கிழக்கிலும் நிலாவெளியிலும் சாம்பல் தீவிலும் கும்ப விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூதூர் கிழக்கில் வரலாற்று பழமை மிக்கதும் தொன்ம மரபு...
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கியைடாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் துரித கதியில் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு...