கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சர் போன்ற பதவிநிலைகளை வகித்த நிசாந்தன் துரையப்பா தற்போது துணைப் பொலிஸ்மா அதிபராகத் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஹால்ரன் பொலிஸ் திணைக்களம் கடந்த வார...
காலி கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை இலங்கை கொடியுடன் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த  ஆயுதங்கள் அவன்ட் கார்டே நிறுவனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டவை என கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன. காலித் றைமுகத்திற்கு கப்பல் செல்வதற்கு முன்னர் அதில் ஆயுதங்கள் இருப்பதாக தங்களிற்கு அறிவிக்கப்படவில்லை, கப்பலின் தலைமை மாலுமி இலங்கையர் என தகவல்கள் வெளியாகியிருந்தன ஆனால் அவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் குறிப்பிட்ட கப்பலில் காணப்பட்ட ஆயுதங்களை ரக்னா லங்கா நிறுவனத்திற்கு வழங்குவதற்காவே எடுத்துச்...
தமிழ் மக்களுக்கான சமத்துவம் எப்போது என்ற கேள்வியை அல்லது எதிர்பார்ப்பை சில தமிழ் பிராந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கள் வெளிப்படுத்தி எழுத்தப்பட்டுள்ளன. குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழர் வானொலியான GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இன்றையே நாளேடுகளின் ஆசிரியர் தலையங்கள் பற்றிய பார்வையை குளோபல் தமிழ் வாசகர்களுக்காக தருகின்றோம். சமத்துவம் எப்போது? சமத்துவ சகவாழ்வுப் பாதையில் அரசு கால் பதிப்பது எப்போது? என்ற தலைப்பில் தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்...
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், 73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்தும் அகதிகளாக வாழ விரும்பாதவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் பல்வேறு அகதி முகாம்களில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பினை வழங்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், உள்நாட்டு...
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என மாகாண மீனவர் கூட்டமைப்பின் செயலாளர் என்.வீ. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை பார்க்கும் போது, மக்கள் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்....
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட கைதுசெய்யப்பட்டு கிரிதல இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததையும் அதன் பின்னரே அவர் காணமற்போனதையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ்பேச்சாளர் ருவான்குணசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கிரிதல இராணுவமுகாமில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்படுகின்ற புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேர் குறிப்பிட்ட முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த விசேட உரையில் பிரதமர் விளக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் தெளிவுபடுத்துவார் என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு...
யாழில்  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று காலை ரில்கோ விடுந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன் போது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையும் வெளியிட்டு வைக்கபப்ட்டது. இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்...
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனம், ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 9100 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பத்து மாதங்களில் இந்தப் பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்திடமிருந்து, அவன் கார்ட் நிறுவனம் பெற்றுக்கொண்ட சேவைக்காக இவ்வாறு பணம் செலுத்தப்பட உள்ளது. பாரிய குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பங்கேற்ற ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். நிறுனம் ஆரம்பிக்கப்பட்டு முதல்...