ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார். வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார். தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார். இன்று புலம் பெயா் நாடுகளில் பல வாழும் 100 வீதத்தில் நுாறு வீதத்தில் 95 வீதமானவா்கள் தமது குடும்பம் தமது உறவுகள் என வாழும் நிலையில் அன்னலவாக 5 வீதத்தினா் இப்படியான நல் உள்ளங்களும் இருப்பது...
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூடின் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத் தொடங்கியுவுடன் இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை அறிந்து கொண்ட தாஜூடின் குடும்பத்தினர், சட்டத்தரணிகளை இத்தாலிக்கு அனுப்பி அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டியுள்ளனர். எங்கு தங்கியிருக்கின்றார்கள் எங்கு பணியாற்றுகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் திரட்டி அவற்றை சட்டத்தரணிகள்,...
வடமாகாண கால்நடை அமைச்சின் தகர் திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு ‘தகர் வளர் துயர் தகர்’ என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றைக் கடந்த ஆண்டில் இருந்து செயற்படுத்தி...
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கான விளம்பரத்தை பார்த்து விட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. நீதி அமைச்சின் அனுமதிக்கமைய ஒரு மாதத்திற்கு முன்னர் இவ் வெற்றிடத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டதாக உதவி பொலிஸ் ஆணையாளர் அருணா அத்தபத்து தெரிவித்துள்ளார். வெற்றிடங்களுக்கு இரண்டு பேர் தெரிவு செய்வதற்கான பயற்சிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பயற்சியை நிறைவு செய்த இரண்டு கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறுதான் வலியுறுத்துவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக இன்றைய திவயின சிங்கள பத்திரிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும் பறித்தெடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை. எங்களது...
நயினாதீவுக்கு செல்லும் பயணிகள் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க நேர்ந்துள்ளதாக பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நயினாதீவு படகுப்பயணத்தில் கடும் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுகளுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகின்றது. எனினும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பல படகுகளில் ஓட்டை விழுந்து, ஆபத்தான...
இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது.3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனஇந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க...
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.சீன தலைநகர் பீஜிங்கில் 15வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி நடந்தது.இதில் உலகின் ‘மின்னல் வேக மனிதன்’ ஜமைக்காவின் உசைன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் உள்ளிட்ட 9 பேர் பங்கேற்றனர். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம்...
சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி சங்கக்காரா ஓய்வு பெற்ற பிறகு அவர் இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இந்த சூழல் இலங்கை அணி வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக...
உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் போது உசைன்போல்டை கமெராமேன் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உலகச் சாம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான 200 மீற்றர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்சுற்று நடைபெற்றது.இந்த போட்டியில் உசைன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.அமெரிக்காவின் காட்லின் 19.74 வினாடிகளில் கடந்து 2வது இடத்தையும், தென்ஆப்பிரிக்கா வீரர்...