ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்ததோடு மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 50, 100, 175 நாட்கள் என்பதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தது. ஆயிரம் திரையரங்குகளில் வெளியானால் 3, 4 வாரங்கள் ஓடுவதுடன் முடிவடைந்துவிடும். சில திரையரங்குகள் மட்டும் ஷேர் செய்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி...
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தவர் ஷாம்லி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த துர்கா படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஷாம்லி, நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது...
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இந்தத் தகவலை அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த நிஷா பிஸ்வாலிடம் இந்த பொறிமுறை கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் குறித்த பொறிமுறை குறித்து பிஷ்வால் தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டுதல் மற்றும் 90ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஒத்தவகையில் இந்த பொறிமுறை அமைந்துள்ளது. இதேவேளை சர்வதேச...
மாதமொன்றுக்கு குறைந்த பட்சம் 20 பேர் வரையான எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் கண்டறியப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு செயற்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்களுக்கு அறிவூட்டல் செயற்திட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 126 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகர் 25...
எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருந்தன. எனினும் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக எதிர்வரும் 03ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கும் யோசனை ஒன்று நாடாளுமன்றில் முன்வைத்து எதிர்வரும் 04ஆம் திகதி பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் எதிர்வரும் 02ஆம் திகதி...
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கில் கணவனான யேசுராசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றவியல் சட்ட நடவடி கோவையின் 286 ஆம் பிரிவின் கீழ், நீதிபதியினால் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததன் பின்னர், அந்தத் தண்டனைய நிறைவேற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என தீர்ப்பளித்த நீதிபதி தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதிக்கு அறிக்கையிட வேண்டும் என்ற சட்ட சரத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை நீதிபதியினால் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி...
பொதுத் தேர்தலின்போது ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியை சுற்றியிருப்பதாக பொலனறுவை மாவட்டத்தில் முன்னணியின் கீழ் போட்டு தோல்வியடைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி மற்றும் ஹங்குராங்கொடை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுசந்த ஞானரத்ன ஆகியோர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...
இலங்கையில் இடம்பெறவுள்ள 2015 நீர்க்காக்கை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவுள்ளன. இந்த பயிற்சிகளில் வெளிநாடுகளின் சுமார் 2000 முப்படைவீரர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த தகவலை இராணுவ தலைமையதிகாரி ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார். புல்மோட்டை முதல் வடக்கு அருகம்பே வரையிலான பிரதேசத்தில் முதல் கட்ட பயிற்சிகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன. இந்தியா சீனாவை தவிர, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வீரர்கள் இந்த பயிற்சிகளில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் சார்ந்த இடங்களை...
ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளுக்கு மேற்படி குழு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், யாழ்.மாவட்டத்தில் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்தனர். தொடர்புடைய செய்தி ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று கிளிநொச்சி விஜயம்
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உபதலைவர் பொன்.காந்தன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன் ஆகியோர் இன்று மாலை 2 மணியளவில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து மிகவேகமாக வந்துகொண்டிருந்த வாகனமொன்று பின்புறமாக இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, இருவரும் தூக்கி வீசப்பட்டதுடன் பொன்.காந்தன் சிறிய காயங்களுக்குள்ளானார். அவர்கள் பயணம்...