உலகின் மாபெரும் 70-வது தக்காளி திருவிழாவானது ஸ்பெயின் நாட்டின் பியூனால் நகரில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகள் மத்தியில் கோலாகலமாக தொடங்கியது.இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து 22 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1945-ம் ஆண்டு முதலே ஓகஸ்ட் மாதத்தின் கடைசி புதன் அன்று பியூனால் நகர மக்கள் தக்காளி வீசும் விழாவினை கோலாகலமாக சிறப்பித்து வருகின்றனர். 1960 களில் சர்வாதிகாரி ஃப்ராங்கோ, மத முக்கியத்துவம் ஏதும்...
பிரித்தானியாவின் பிரதமரான டேவிட் கமரூன் விடுமுறையை முன்னிட்டு தனது மனைவியுடன் கடற்கரையில் உற்சாகமாக நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். பிரித்தானியாவின் பிரதமரான டேவிட் கமரூன் அகதிகள் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்.இந்நிலையில் கார்ம்வெலின் போல்ஜீத் பகுதியின் கடற்கரைக்கு தனது மனைவி சமந்தாவுடன் வந்த கமரூன் உற்சாகமாக நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார்.2 நாள் விடுமுறையாக வந்த அவர் நீர்சறுக்கு விளையாட்டுக்கு தேவையான உடைகளை அணிந்திருந்தார். மேலும் அவருக்கு...
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்ததாக எண்ணி உயிருடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஹொண்டுரஸ்(Honduras) மாகாணத்தில் உள்ள லா எண்ட்ராடா பகுதியை சேர்ந்தவர் நெய்சி பெரேஸ்(Neysi Perez 16).கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நெய்சி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருமண...
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை எய்ட்ஸ் எனும் கொடிய நோய் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்கள் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து வருகின்றனர்.மேலும், பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திவருகின்றனர், இந்நிலையில் மொரோக்கானை சேர்ந்த இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது. அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது...
பிரித்தானியா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தாயார் ஒருவர் மது போதைக்கு அடிமையாகி குழந்தைகளை பராமரிக்க தவறியதால், அந்த குற்ற உணர்வு தாங்காமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனில் உள்ள 12.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள 5 அடுக்கு சொகுசு மாளிகையில் சாரா ஜான்சன்(36) தன்னுடைய கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.கோடீஸ்வரரான சாராவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தினமும்...
8ஆவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ள அதேவேளை, அன்றைய தினம் ஜனாதிபதி விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரியவருகிறது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அந்த உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்டவர்களும் அன்றைய தினம்...
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழங்கப்படும் எந்தவொரு பதவிகளையும் தாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தமது பெயர் 7ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும், இதற்கு கட்சியன்...
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தெரிவித்துள்ளார் ரவி கருணாநாயக்க. அமைச்சரவையில் இடம்பெறும்...
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சார்பில் சிறிலங்கா தொடர்பாக கருத்து வெளியிடப்படும் சந்தர்ப்பங்களில், பொறுப்புக்கூறல், போர்க்குற்றங்கள் , மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்படுவது வழக்கம். எனினும், நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதியைப் பெற்றுள்ளது. பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன நேரத்தில் இவர்கள் கிரிதல இராணுவ முகாமில் பணியாற்றிவர்கள் என்றும், அதுதொடர்பாக விசாரிக்கவே 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில்...