புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைச்சுப் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாமை காரணமாகவே பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 27ம்திகதி ஒரு தொகை அமைச்சர்களும், அதற்கடுத்த தொகுதி அமைச்சர்கள் 28ம் திகதியும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். நாடாளுமன்றம் கூடிய பின்னர்...
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் சுமார் 115 கோடி ரூபா கடன் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை கடன் அடிப்படையில் சுயாதீன தொலைக்காடசி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. விளம்பரங்களுக்கும் மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்பட்டிருந்தன. அவ்வாறிருந்தும் விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையான 115 கோடி ரூபாவை மஹிந்த தரப்பினர் பாக்கி வைத்துள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட ஜனாதிபதி...
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். ஆகஸ்ட் 17 ஆம் திகதி தேர்தலை மிக அமைதியாகவும் நியாயமானதாகவும் நடத்திமை குறித்தும் பிளேயார் ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்கு சரியான...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் ஆணைக்குழுவில் கோத்தபாய ராஜபக்ச இன்று ஆஜராகினார். விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவரிடம் எது குறித்து விசாரணை நடத்தப்பட்ட என ஊடகவியலாளர்கள் கேட்டனர். ரக்னா...
  நெலுக்குளம் குளப்பகுதியை அ;ண்டிய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர் நெலுக்குளம் உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று 24-08- 2015 காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர். வவுனியா கமலநல சேவைகள் திணைக்களம் 65 குடும்பங்களது உறுதிக்காணி உள்ள பகுதிகளில் அளவீடு செய்து காணிகளை சுவிகரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியே மக்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 45 வருடங்களாக வாழ்ந்த இடத்தை பறிக்காதே, பறிக்காதே பறிக்காதே...
  பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.  பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியை சேர்ந்தவர் முகமது அபாத். அவரது 6வது வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது ஆண் உறுப்பு முழுவதும் சிதைந்துபோனது. அவர் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு செயற்கை ஆண் உறுப்பு பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இதற்காக அவரது கையில்...
  வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் இவர்களுடைய இடத்திற்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் மாவட்ட உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அங்கஐன் இராமநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வைத்திய கலாநிதி சிவமோகன் சிவனேசன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சோந்த ஜெயதிலகா...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட க.துரைரெட்ணசிங்கமும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஓய்வுபெற்ற அதிபராவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
  பெண் பிரதிநிதிகளை உள்வாங்கும் வகையில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அமையவேண்டும் எம்.ஏ. சுமந்­திரன் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள தேசியப் பட்­டியல் ஆச­னங்கள் இரண்­டையும் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பயன்­ப­டுத்­த­வேண்­டு­மென யாழ்.தேர்தல் மாவட்­டத்தில் மூன்­றா­வது அதி­கூ­டிய விருப்பு வாக்­கு­களைப் பெற்று தெரி­வான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வட­கி­ழக்கு தமிழ் மக்கள் ஒன்­று­பட்டு தமது ஆணையை வழங்­கி­யுள்ளனர். அத­ன­டிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய பட்­டியல் ஆச­னங்கள்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன விடயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற சந்திப்பு சுமார்...