தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரண்டு தேசியப்பட்டியில் ஆசனங்களில் ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் என கோரி 4 பேரின் பெயர்களை தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கும் அதன் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் பரிந்துரைத்துள்ளது என கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று (23.8) தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் ஒன்றை கூட்டுக்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன...
  முல்லைத்தீவு மாங்குளத்தில் கடைக்கு பொருட்களை வாங்கச்சென்ற சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கோடு கையைப்பிடித்து இழுத்த சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் நையப்புடையப்பட்டு மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23.8) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மாங்குளம் கல்குவாரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற சமயம் அப்பகுதியில் இருந்த இருவர் அச் சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளனர். இதனை அவதானித்த பொது மக்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கிருந்த ஒருவர் தப்பியோடிவிட ஒருவர் பொது...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார். சம்பூரில் காணிகளை மீள ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்க நேற்றுமுன்தினம் பிற்பகல் திருகோணமலை சென்றிருந்த ஜனாதிபதி இரவுப் பொழுதை திருகோணமலையிலேயே கழித்திருந்தார். நேற்றுக்காலை அவர், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்துக்கு அவதானிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதன் போது, கடற்படை...
  தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று 23.08.2015 அன்று மாலை 06.30 மணியளவில் ட்ரூப் தோட்ட பிரதான வீதியில் ட்ரூப் தோட்ட அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வேனில் பயணித்த சிறு குழந்தை உட்பட 03 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மூவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ...
  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  23.08.2015 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகையில் வழிபாடுகளில்  ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும்சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார்.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவுப் ஹக்கீம்...
இலங்கையின் 15வது நாடாளுமன்றத்தேர்தல் கடந்த 17.08.2015 அன்று நடைபெற்றுமுடிந்துள்ள இந்நிலையில் வடகிழக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை மீண்டும் தமிழ் மக்கள் தேசியத்தலைவரின் ஆணைக்கு மதிப்பளித்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்று மையை சீர்குலைப்பதற்காக வடபிராந்தியத்தில் மாத்திரம் 28 சுயேட்சைக்குழுக்கள், கிழக்கில் 32 சுயேட்சைக்குழுக்கள் என இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் களமிறக்கப்பட்டன. இதில் குறிப்பாகக் கூறவேண்டிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் முன்னாள் போரா ளிகள் எனக்கூறிக்கொண்டு வித்தியாதரன்...
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு இற்றைவரைக்கும் தமிழினம் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவோ அல்லது தமது அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை பேணிப்பாதுகாப்பதற்கான வழி வகைகளை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனு மதித்ததில்லை. குறிப்பாகத் தென் னிலங்கையின் அரசியலைப் பார்க்கின்றபொழுது, மாறிமாறி வந்த அரசாங்கங்களெல்லாம் தமிழினத்தின் துரோகிகளாகவே செயற்பட்டுவந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரையான ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டால் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான நிகழ்ச்சிநிரலை...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
  தேர்தல் நடைபெற முன்னரே ஒரு கட்சி தேசிய பட்டியலில் யாரை தெரிவு செய்ய இருக்கிறார்கள் என்ற விபரத்தை வழங்க வேண்டும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , மின்னல் நிகழ்ச்சி நடத்தி வரும் ரங்காவின் பெயரையும் இணைத்தது. இதனால் ரங்காகா சற்று தெனாவட்டாக சுற்றி திரிந்தார். நமால் மற்றும் மகிந்தவின் ஆதரவு பெற்ற ரங்காவுக்கு கட்சி ஊடாக தேசிய பட்டியலில் MP பதவி வழங்கப்பட இருக்கிறது என்பது...
  திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை வழங்கிவைத்தார். அத்துடன் சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன், அமைச்சர் ஹக்கீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர்...