விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி….. … “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம்,...
  காணமால் போண உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்    இன்று(11.08.2015)காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணமல்போணோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பால சிறிசெனா அவர்களின் புகைப்படத்தில் காணமல் போண மூன்று நபர்கள் காணப்படுவதாகவும் . அவர்கள் தங்களது உறவுகள் எனவும் காணமல் போணோரின் உறவுகள் தெரிவித்தனர் தேர்தல் காலங்களில் மாத்திரம் வேட்பாளர்கள் காணமல்போண உறவுகளுக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம் எங்களிடம்...
  ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க ஜனநாயகக்கட்சி என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது! தாங்கள் கடந்த சில காலங்களாக உங்களிஷ்டப்படி தன்னிச்சையாக நடந்து கொள்வது கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களான எமக்கு வேதனையையும் விசனத்தையும் அளிக்கிறது! இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திற்கான வேட்பாளர் தெரிவுக்கு வலம்புரி பத்திரிகையில் விளம்பரம் செய்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள் அதன்பின் கட்சியின் உறுப்பினர்களோடு ஏதேனும் ஒரு சந்திப்பை நடத்தாமல் உங்கள்...
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம். சுமந்திரன், கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எஸ். சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்டோர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக் கட்சி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இதேவேளை ஈழமக்கள்...
6 (NO TI வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதே இரு சமூகங்களின் இருப்புக்கும் நல்லது. ஒரு சமூகத்தை பகைத்துக் கொண்டு இன்னொரு சமூகத்தால் வாழ முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஆனால் இந்த ஒற்றுமையின் பெயரால் ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் சம்பவங்களைத் தான் கடந்த காலங்களில் காணமுடிகிறது. மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா எப்படி தமிழர்களின் காணிகளை சைவக்கோவில்களின் காணிகளை அபகரித்து...
  யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளியாகியுள்ள அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறையே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உள்ளக விசாரணை பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது தீர்வாக அமையாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் ,தனை தெரிவித்தார். ஐ.நா.மனித...
  தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, தான் அங்கத்துவம் வகிக்கும் அந்த அரசுக்கு நித்தமும் பெரும் குடைச்சலை கொடுத்து நிம்மதியை கெடுத்துக்கொண்டிருந்த தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள், சமகால அரசியல் சூழலில் இன்று எங்கள் கூடவே இருந்திருக்க வேண்டும். சிறீலங்காவின் செங்கோல் காலி முகத்துவாரத்திலோ அல்லது ஹம்பாந்தோட்டை கடலிலோ தூக்கி வீசியெறியப்பட்டிருக்கும் என்றும், தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு ‘தமிழ்த்தேசியம், தனித்தமிழ் தாயகம், சுயாட்சியை’ வலியுறுத்துவது – கோருவது மிகவும் கடினமானது. சவாலானது! இந்தக்கடினமான, சவாலான...
  அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம்  பெற்று தராவிட்டால் அன்று தமிழரசுக்கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறினார் - ரிசாட் பதியூதீன் வவுனியா அண்ணா நகரில் இன்று 11-08-2015 நடைபெற்ற ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிசாட்பதியுதீன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஒரு தேசிய உணர்வோடு தமிழ் சமூகம் பயணித்தது என தெரிவித்த ரிசாட் பதியூதீன் ஆகக்குறைந்தது சமஸ்டியை தலைவர் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு தமிழ் சமூகம் பயணித்தது....
  "ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்." - இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். அறிக்கை கிடைப்பதற்கு முன்னதாக மேற்படி விவகாரங்கள் தொடர்பில் தற்போது வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பில் எதுவும் கூறமுடியாது என்றும் அவர் கூறினார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக...